• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • வடிவேலுவை வைத்து ஷங்கரை பழிவாங்க லைகா திட்டம்?

வடிவேலுவை வைத்து ஷங்கரை பழிவாங்க லைகா திட்டம்?

வடிவேலு

வடிவேலு

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நாய் சேகர் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இது வடிவேலின் இரண்டாவது இன்னிங்ஸ்.

  • Share this:
    எதிரிக்கு எதிரி நண்பன் என்று சும்மாவா சொன்னார்கள். இந்தியன் 2 விவகாரத்தில் தங்களை கைவிட்ட ஷங்கரை, வடிவேலுவை வைத்து லைகா பழிவாங்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

    இந்தியன் 2-க்கு முன்னால், இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி பற்றி பார்ப்போம். வடிவேலுவை முதன்முதலில் ஹீரோவாக்கி படம் தயாரித்தவர் ஷங்கர். படம், இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி. இயக்கம் சிம்புதேவன். படம் கன்னாபின்னாவென்று ஓடியது. அதன் பிறகு வடிவேலு நாயகனாக நடித்த எந்தப் படமும் ஓடாமல் வீட்டிலிருந்த போது மறுபடியும் ஷங்கர் - சிம்புதேவன் கூட்டணி அவரை வைத்து 23 ஆம் புலிகேசியின் இரண்டாம் பாகத்தை 24 ஆம் புலிகேசி என்ற பெயரில் தயாரிக்க முன் வந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    காஸ்ட்யூம் சரியில்லை, காஸ்ட்யூமர் சரியில்லை என்று வடிவேலு தினம் ஒரு காரணம் கண்டுபிடித்து குடைச்சல் கொடுத்தார். படம் தொடங்கிய பின் சம்பளத்தை உயர்த்தி கேட்டார். இரண்டையும் சரி செய்த பிறகும் வடிவேலு தனது ஒத்துழையாமை இயக்கத்தை தொடர படம் நின்றது. ஷங்கருக்கு 7 கோடிகள் வரை நஷ்டம். ஒன்று படத்தை நடித்துத் தரட்டும், இல்லை செலவான பணத்தை தரட்டும் என ஷங்கர் தரப்பு சங்கத்தில் புகார் செய்து பஞ்சாயத்து பேசியது. சினிமா பஞ்சாயத்து போலவே இரண்டுக்கும் மசியவில்லை வடிவேலு. அதனால், படங்களில் நடிக்கும் வாய்ப்பு பறிபோனது குறித்து கூட வடிவேலு கவலைப்படவில்லை. இந்தப் படத்தின் தயாரிப்பில் லைகா பங்கெடுத்திருந்தது. ஷங்கர் முதல் காப்பி அடிப்படையில் படத்தை தயாரித்துத்தர ஒப்புக் கொண்டதால் இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி நின்றுபோனதில் லைகாவுக்கு பாதகமில்லை என கூறப்படுகிறது.

    vadivelu, vadivelu suraj movie, vadivelu template, vadivelu naai sekar, comedy actor vadivelu, vadivelu for life, vadivelu movies, vadivelu comedy, வடிவேலு, வைகைப்புயல் வடிவேலு, வடிவேலு காமெடி, நகைச்சுவை நடிகர் வடிவேலு, வடிவேலு சுராஜ், வடிவேலு நாய் சேகர், lyca shankar, lyca shankar issue, vadivelu naai sekar movie, வடிவேலு நாய் சேகர் படம், லைகா ஷங்கர்
    சுராஜுடன் வடிவேலு


    இந்த பிரச்சனைக்குப் பிறகே லைகா தயாரிப்பில் கமலை வைத்து இந்தியன் 2 படத்தை ஷங்கர் தொடங்கினார். அவருக்கும், லைகாவுக்கும் ஏற்பட்ட மோதலில் படம் பாதியில் நிற்கிறது. இந்தியன் 2-வை முடித்த பிறகே ஷங்கர் வேறு படங்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்ற லைகாவின் மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தற்போது மேல்முறையீட்டுக்கு சென்றிருக்கும் லைகா ரகசியமாக இன்னொரு வேலையும் செய்துள்ளது.

    சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நாய் சேகர் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இது வடிவேலின் இரண்டாவது இன்னிங்ஸ். செப்டம்பரில் படப்பிடிப்பை தொடங்க மும்முரமாக பணியாற்றி வருகிறார் சுராஜ். இந்தப் படத்தை தயாரிக்க லைகா முன்வந்திருப்பதாக தகவல். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் அவர்கள் வடிவேலுடன் கைகோர்த்திருப்பதாக கோடம்பாக்கம் கிசுகிசுக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: