• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சிவகார்த்திகேயனின் டான் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட லைகா!

சிவகார்த்திகேயனின் டான் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட லைகா!

டான்

டான்

ரொமான்டிக் காமெடியாக தயாராகிவரும் டான் படத்தில் நாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். சூரி, காளிவெங்கட், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சிவகார்த்திகேயன் நடித்துவரும் டான் படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் தயாராகி வருகின்றன. சிபி சக்ரவர்த்தி இயக்கும் டான் மற்றும் அயலான். இதில் டான் படத்தின் படப்பிடிப்பு ஆக்ராவில் சமீபத்தில் நடந்தது. தாஜ்மஹாலில் ஒரு பாடல் காட்சியும் எடுக்கப்பட்டது. இந்நிலையில் படம் குறித்த முக்கியமான அப்டேட்டை லைகா பகிர்ந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



டானின் முக்கிய காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்ட நிலையில், இன்று படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியதாக லைகா அறிவித்துள்ளது. . சம்பிரதாயமாக பூஜை போட்டு டப்பிங்கை தொடங்கியுள்ளனர். சிவகார்த்திகேயன் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங்கை பேசியுள்ளார்



Also read... பூஜையுடன் தொடங்கிய தலைநகரம் 2 - படங்கள்!

ரொமான்டிக் காமெடியாக தயாராகிவரும் டான் படத்தில் நாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். சூரி, காளிவெங்கட், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார்.



டான் படம் 2022 ஜனவரி 26 திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: