முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஏகே 62 அப்டேட்? அடுத்தப்பட அறிவிப்பை வெளியிட தயாரான லைகா.. அஜித்தை முந்தும் அருள்நிதி.. குழப்பத்தில் அஜித் ரசிகர்கள்.!

ஏகே 62 அப்டேட்? அடுத்தப்பட அறிவிப்பை வெளியிட தயாரான லைகா.. அஜித்தை முந்தும் அருள்நிதி.. குழப்பத்தில் அஜித் ரசிகர்கள்.!

அஜித்

அஜித்

கடந்த இரண்டு வாரங்களாக எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்த அந்த தயாரிப்பு நிறுவனம், தற்போது தங்களின் அடுத்தப்பட அறிவிப்பை வெளியிட தொடங்கியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அஜித் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமல், அருள்நிதி நடிக்கும் புதிய திரைப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வையை லைகா நிறுவனம் நாளை அறிவிக்கிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நிறுவனமான லைகா,  அஜித் நடிப்பில் அவரின் 62 ஆவது திரைப்படத்தை தயாரிக்க உள்ளது.  ஆனால் அந்த திரைப்படத்தின் இயக்குனராக ஒப்பந்தமான விக்னேஷ் சிவன் மாற்றப்பட்டுள்ளார்.  இதனால் அடுத்த இயக்குனர் பற்றிய அறிவிப்பு எப்போது வரும் என ரசிகர்கள்  காத்திருக்கின்றனர்.  குறிப்பாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Image

இந்த நிலையில் அவர்கள் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வையை நாளை வெளியிடுகின்றனர். இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்த அந்த தயாரிப்பு நிறுவனம், தற்போது தங்களின் அடுத்தப்பட அறிவிப்பை வெளியிட தொடங்கியுள்ளது. இருப்பினும் அஜித் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அஜித் ரசிகர்கள் நம்புகின்றனர்.

First published:

Tags: Ajith, Cinema, Lyca