King Maker: மோகன் ராஜா இயக்கத்தில் கிங் மேக்கராகும் சிரஞ்சீவி!

King Maker: மோகன் ராஜா இயக்கத்தில் கிங் மேக்கராகும் சிரஞ்சீவி!

சிரஞ்சீவியுடன் மோகன்லால்

மலையாளத்தில் 150 கோடிகளுக்கு மேல் வசூலித்த சூப்பர்ஹிட் பொலிடிகல் த்ரில்லர் லூசிஃபர். இந்தப் படத்தை தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து மோகன் ராஜா ரீமேக் செய்கிறார்.

  • Share this:
    மலையாளத்தில் 150 கோடிகளுக்கு மேல் வசூலித்த சூப்பர்ஹிட் பொலிடிகல் த்ரில்லர் லூசிஃபர். இந்தப் படத்தை தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து மோகன் ராஜா ரீமேக் செய்கிறார்.

    மலையாளத்தில் ஒரு படம் 100 கோடியை தாண்டுவது சாதனை. மோகன்லாலின் புலிமுருகனைத் தொடர்ந்து 150 கோடிகள் வசூலித்து சாதனை படைத்த படம் லூசிஃபர். நடிகர் பிருத்விராஜின் இயக்கத்தில் வெளிவந்த முதல்படம் என்பது கூடுதல் ஆச்சரியம். இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை எழுதியவர் முரளி கோபி.
    இப்போது லூசிஃபரை தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் ரீமேக் செய்கின்றனர். ரீமேக்கை இயக்குகிறவர் நம்மூர் இயக்குநர் மோகன் ராஜா.

    தெலுங்குப் படத்தை தமிழில் ஜெயம் என்ற பெயரில் தனது தம்பி ஜெயம் ரவியை வைத்து ரீமேக் செய்து, இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ராஜா. ஜெயம் ரவிக்கும் அதுவே முதல்படம். அதன் பிறகு தொடர்ச்சியாக தனது தம்பியை வைத்து தெலுங்குப் படங்களை தமிழில் ரீமேக் செய்தார். ரீமேக் தவிர்த்து அவர் இயக்கிய முதல் படம் வேலாயுதம். படம் சுமார் வெற்றி. இரண்டாவது தனி ஒருவன், பிளாக் பஸ்டர் ஹிட். அதையடுத்து அவர் இயக்கிய வேலைக்காரன், சுமார் வெற்றி பெற்றது.

    தவிர லூசிஃபர் ரீமேக்கை சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தயாரிக்கிறார். படத்துக்கு என்ன பெயர் வைப்பது என்று யோசித்து இறுதியில் ’கிங் மேக்கர்’ என்ற பெயரை தற்காலிகமாக 'டிக்' செய்திருக்கிறார்கள். மே 13-ம் தேதி சிரஞ்சீவி நடித்திருக்கும் ஆச்சாரியா படம் வெளியாகிறது. அதனைத் தொடர்ந்து கிங் மேக்கர் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. அத்துடன் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்திலும் சிரஞ்சீவி நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: