குழந்தைகளை மகிழ்விக்க தமிழில் வெளியாகும் லூகா

லூகா

இந்தியாவில் லூகா வரும் 30 ஆம் தேதி டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
லூகா அனிமேஷன் திரைப்படம் இந்தியாவில் வரும் 30 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவின் ஓர் அங்கமான Pixar அனிமேஷன் ஸ்டுடியோ உலகப் பிரசித்தமானது. 1995 இல் டாய் ஸ்டோரி படத்தை இவர்கள் உருவாக்கினார்கள். இதுவரை 24 முழுநீள திரைப்படங்கள் பிக்ஸர் கைவண்ணத்தில் உருவாகியிருக்கிறது. அனைத்துப் படங்களுமே தரமானவை. உலக அளவில் கவனம் பெற்றவை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவர்கள் தயாரிப்பில் சென்ற வருடம் Soul திரைப்படம் வெளியானது. அதனை திரையரங்கில் வெளியிடாமல் நேரடியாக ஓடிடியில் வெளியிட்டதில் பிக்ஸர் ஊழியர்களுக்கு மனவருத்தம். அதன் பிறகு தயாரான லூகா திரைப்படத்தையும் நேரடி ஓடிடி வெளியீடாக கொண்டுவர பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் டிஸ்னி கரோனாவை காரணம்காட்டி நேரடியாக ஓடிடியில் வெளியிட்டது. சில இடங்களில் மட்டும் படம் திரையரங்கில் வெளியானது.

Also read... இளைய சூப்பர் ஸ்டார் தனுஷ் - தெறிக்கவிட்ட தெலுங்கு தயாரிப்பாளர்

இந்தியாவில் லூகா வரும் 30 ஆம் தேதி டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகிறது. இத்தாலியை பின்னணியாகக் கொண்டு லூகாவின் கதை எழுதப்பட்டுள்ளது. நீரில் விலங்கு தோற்றத்தில் இருக்கும் சிறுவன் லூகா நிலத்தில் சாதாரண மனித உருக்கொள்ளும் திறமை கொண்டவன். இவனைச் சுற்றி கதை எழுதப்பட்டுள்ளது. என்ட்ரிகோ கேஸரோஸா படத்தை இயக்கியுள்ளார்

குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் பிக்ஸர் தயாரிக்கும் படங்களைப் பார்க்கலாம். அத்தனை சிறப்பு வாய்ந்தவை ஒவ்வொரு படங்களும். லூகாவும் நம்மை ஏமாற்றாது
Published by:Vinothini Aandisamy
First published: