ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வேற லெவல் ரீச்.. பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் லவ் டுடே டிரெய்லர்!

வேற லெவல் ரீச்.. பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் லவ் டுடே டிரெய்லர்!

லவ் டுடே டிரெய்ல

லவ் டுடே டிரெய்ல

விஜய் நடிப்பில் வெளியான லவ் டுடே திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கோமாளி திரைப்படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் லவ் டுடே திரைப்படத்தின் ட்ரெய்லர் இளைஞர்களின் கவனத்தை ஈர்க்க தொடங்கியுள்ளது

.ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியிருந்தார். அந்த திரைப்படம் வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் லவ் டுடே என்ற திரைப்படத்தை இயக்கி அதில் நாயகனாக நடிக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.

கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் மயங்கிக் கிடந்த குழந்தை நட்சத்திரம் லோகேஷ்.. தற்கொலைக்கு காரணம் என்ன?

அதில் சத்யராஜ் மற்றும் இவானா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இளம் காதலர்களான பிரதீப் ரங்கநாதன் மற்றும் இவானா ஆகியோருக்கு இடையே நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை மையமாக வைத்து லவ் டுடே திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.  அதற்கான ட்ரெய்லரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

' isDesktop="true" id="814226" youtubeid="FaQe8JFGdaM" category="cinema">

அதில் இடம்பெற்றுள்ள காட்சிகள் தற்போது இளைஞர்களை அதிகம் கவர தொடங்கியுள்ளது.  குறிப்பாக காதலர்களின் கைபேசி மாற்றி கொள்ளும் போது ஏற்படும் நிகழ்வுகளை சுவாரஸ்சியமாக கூற முயற்சித்துள்ளனர்.  இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதே தலைப்பில் விஜய் நடிப்பில் வெளியான லவ் டுடே திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Sreeja
First published:

Tags: Comali, Kollywood, Tamil Cinema