முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சிம்பு இல்லையாம்... லவ் டுடே பிரதீப் நடிக்கிறாராம் - வெளியான சுவாரசியத் தகவல்!

சிம்பு இல்லையாம்... லவ் டுடே பிரதீப் நடிக்கிறாராம் - வெளியான சுவாரசியத் தகவல்!

பிரதீப் ரங்கநாதன் - சிலம்பரசன்

பிரதீப் ரங்கநாதன் - சிலம்பரசன்

சிம்பு வெந்து தணிந்தது காடு, பத்து தல என அடுத்தடுத்து படங்களில் நடித்துவந்த நிலையில் கொரோனா குமார் தொடங்கப்படாமலேயே இருந்துவந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீவாவின் 'ரௌத்திரம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கோகுல், அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் 'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தை இயக்கினார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து நடிகர் கார்த்தியை வைத்து இவர் இயக்கிய 'காஷ்மோரா',  இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்துக்கு பிறகு விஜய் சேதுபதியுடன் இணைந்த 'ஜுங்கா' போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. கடைசியாக மலையாளத்தில் வெற்றிபெற்ற 'ஹெலன்' படத்தை தமிழில் அன்பினிற்கினியாள் என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தார்.

இந்த நிலையில் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தின் இரண்டாம் பாகத்தை கொரோனா குமார் என்ற பெயரில் உருவாக்க திட்டமிட்டார். இந்தப் படத்தில் முதலில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. சில காரணங்களால் அவர் இந்தப் படத்திலிருந்து விலகிக் கொள்ள, அவருக்கு பதிலாக சிம்பு நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது.

ஆனால் சிம்பு 'வெந்து தணிந்தது காடு', 'பத்து தல' என அடுத்தடுத்து படங்களில் நடித்துவந்த நிலையில் கொரோனா குமார் தொடங்கப்படாமலேயே இருந்துவந்தது. இந்த நிலையில் இந்தப் படததில் சிம்பு விலகிவிட்டதாகவும், அவருக்கு பதிலாக 'லவ் டுடே' பிரதீப் ரங்கநாதனை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

First published:

Tags: Silambarasan, Simbu