ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

21 இடங்களை மார்க் செய்த சென்சார் போர்ட். சீன்களை வெட்டி ஒட்டிய லவ் டுடே படக்குழு..

21 இடங்களை மார்க் செய்த சென்சார் போர்ட். சீன்களை வெட்டி ஒட்டிய லவ் டுடே படக்குழு..

லவ் டுடே

லவ் டுடே

பிரதீப்பின் இந்த லவ் டுடே  படம் ஆப் (அ) லாக் என்ற குறும்படத்தை அடிப்படையாகக் கொண்டது. இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    கோமாளி திரைப்படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் லவ் டுடே திரைப்படத்தில் பல மாற்றங்களை செய்துள்ளது தணிக்கை குழு.

    ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியிருந்தார். அந்த திரைப்படம் வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. தற்போது தனது இரண்டாவது படமான ‘லவ் டுடே’ படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார்.

    பிரதீப்பின் இந்த லவ் டுடே  படம் ஆப் (அ) லாக் என்ற குறும்படத்தை அடிப்படையாகக் கொண்டது. இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    அதில் சத்யராஜ் மற்றும் இவானா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இளம் காதலர்களான பிரதீப் ரங்கநாதன் மற்றும் இவானா ஆகியோருக்கு இடையே நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை மையமாக வைத்து லவ் டுடே திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

    இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்று வெளியான படமும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்று வருகிறது. லவ் டுடே என்ற இதே பெயரில் 20 வருடங்களுக்கு முன்பு விஜய் ஒரு படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Also read... மூன்று தேசிய விருதுகளை வென்ற கமலின் நம்மவர் படம்!

    இந்த நிலையில் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்ட இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் படத்தில் 21 இடங்களில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து சில காட்சிகள் வெட்டி ஒட்டி மாற்றம் செய்த பிறகு படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Entertainment