ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'கேவலமா இருக்கீங்க'.. உருவத்தை கேலி செய்த கும்பல்.. பாசிட்டிவாக பேசி கைதட்டல் வாங்கிய பிரதீப்!

'கேவலமா இருக்கீங்க'.. உருவத்தை கேலி செய்த கும்பல்.. பாசிட்டிவாக பேசி கைதட்டல் வாங்கிய பிரதீப்!

பிரதீப் ரங்கநாதன்

பிரதீப் ரங்கநாதன்

கோமாளி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லவ் டுடே என்ற படத்தை இயக்கி அதில் ஹீரோவாக பிரதீப் நடித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நிகழ்ச்சி ஒன்றில் கோமாளி, லவ் டுடே படங்களின் இயக்குனர் பிரதீப் பேசியிருப்பது வைரலாகி வருகிறது.

  தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக பிரதீப் ரங்கநாதன் கவனம் ஈர்த்து வருகிறார். 29 வயதாகும் பிரதீப் கோமாளி படத்தின் மூலமாக இயக்குனராக சினிமாவில் அறிமுகம் ஆனார்.

  இந்தப் படத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஐசரி கணேஷ் தயாரித்திருந்த இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெற்றது. ரூ. 15 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் ரூ. 50 கோடியை தாண்டி வசூலித்திருந்தது.

  கையை ராகுல்காந்தி பிடித்தது ஏன்? விளக்கமளித்த நடிகை.!

  கோமாளி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லவ் டுடே என்ற படத்தை இயக்கி அதில் ஹீரோவாக பிரதீப் நடித்துள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள லவ் டுடே படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன.

  இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பிரதீப் பேசியது வைரலாகி வருகிறது. நிகழ்ச்சி தொகுப்பாளினி எப்படி இருக்கீங்க என்று பிரதீப்பிடம் கேட்க, அவர் வித்தியாசமான உடல் மொழியைக் காட்டி சூப்பரா இருக்கேங்க என்று பதில் அளித்தார். அப்போது சிலர் கேவலமா இருக்கீங்க என பதிலுக்கு குரல் கொடுத்தனர். ஆனால் அதனை பாசிட்டிவாக மாற்றிய பிரதீப்,

  WATCH: மாலை நேரத்துல மழையை ரசிக்க.. இனிமையான 5 இளையராஜா பாடல்கள்!

  'கேவலமாக இருக்கிறேன் என்பதை நான் சிறுவயது முதலே கேட்டு வருகிறேன். இது எனக்கு புதியது அல்ல. ஆனால் இந்த மேடையில் நான் நிற்பது எனக்கு புதுசு என்று பேச ரசிகர்கள் ஆரவாரம் எழுப்புகிறார்கள். இந்த வீடியோ அதிக விருப்பங்களைப் பெற்று வருகிறது.

  முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதீப், குடும்பத்தில் உள்ள மூத்த, கஷ்டப்படும் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கியிருந்தார். ‘முதல் ஸ்டெப் தாண்டா கஷ்டமா இருக்கு. மத்ததெல்லால் ஈஸிதான். எப்படியாச்சும் மேல ஏறி  வந்துருங்கடா’  என்று பேசியிருந்தார். இந்த வீடியோவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

  Published by:Musthak
  First published:

  Tags: Kollywood