முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / WATCH: 'வாழ்க்கையே மாறிடுச்சு..' லவ் டுடே குறித்து நெகிழ்ச்சியாக பேசிய நாயகி இவானா!

WATCH: 'வாழ்க்கையே மாறிடுச்சு..' லவ் டுடே குறித்து நெகிழ்ச்சியாக பேசிய நாயகி இவானா!

இவானா

இவானா

கோமாளி திரைப்படத்தை தொடர்ந்து லவ் டுடே என்ற திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி மற்றும் நாயகனாக நடித்தார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கோமாளி திரைப்படத்தை தொடர்ந்து லவ் டுடே என்ற திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி மற்றும் நாயகனாக நடித்தார். 2கே கிட்ஸ்களின் சமகால காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் நாயகியாக இவானா நடித்துள்ளார். தவிர, யோகிபாபு, சத்யராஜ், ராதிகா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கல்பாத்தி எஸ்.அகோரம் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் கடந்த நவம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த திரைப்படம் தற்போது 100 நாட்களை கடந்துள்ளது. இதற்கான வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

விழாவில் பேசிய படத்தின் நாயகி இவானா, லவ் டுடே படம் என் வாழ்க்கையை வேறு இடத்துக்கு கொண்டு போயிடுச்சு என்று தெரிவித்தார். மேலும் இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி. அதனை தொடர்ந்து படத்தில் இவானாவின் அப்பாவாகா நடித்த சத்யராஜ் குறித்து பேசிய போது, அவர் மிகவும் அனுபவம் வாய்ந்த நடிகர் அவருடன் நடிக்கும்போது கொஞ்சம் பதட்டம் இருந்தது. ஆனால் அவர் செம்ம கூல் பர்சன், நிறைய சொல்லிக்குடுத்தாங்க, ரொம்ப மரியாதையா எல்லாரையும் நடத்துனாங்க என்றும் இவானா தெரிவித்தார்.

' isDesktop="true" id="892147" youtubeid="RbYqwfWmVMU" category="cinema">

இதனை தொடர்ந்து விழாவில் , லவ் டுடே திரைப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரின் பெயரை சொல்லி அவர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் விருதுகளும் வழங்கப்பட்டன

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Entertainment