ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘வாரிசு படத்தில் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு…’ – எதிர்பார்ப்பை எகிற வைக்கும் இயக்குனர் வம்சி…

‘வாரிசு படத்தில் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு…’ – எதிர்பார்ப்பை எகிற வைக்கும் இயக்குனர் வம்சி…

விஜய் - வம்சி

விஜய் - வம்சி

படத்தின் டிரைலரை வைத்துக்கொண்டு கதையை ரசிகர்களால் தீர்மானித்து விட முடியாது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வாரிசு படத்தில் நிறைய சர்ப்ரைஸ் இருப்பதாகவும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மீறி படம் இருக்கும் என்றும் இயக்குனர் வம்சி கூறியுள்ளார். பொங்கலையொட்டி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. சில திரையரங்குகளில் நள்ளிரவு 1 மணி காட்சி திரையிடப்படவுள்ளது. பெரும்பான்மையான திரையரங்குகளில் அதிகாலை 4 மணிக்கு முதல்நாள் முதல்காட்சி திரையிடப்படுகிறது.

இந்த படத்திலிருந்து பாடல்கள், ட்ரைலர் காட்சிகள் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், வாரிசு படம் குறித்து இயக்குனர் வம்சி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- படத்தில் நிறைய சர்ப்ரைஸ் உள்ளன. டிரைலரைத் தாண்டி படத்தில் நிறைய நிறைய விஷயங்கள் உள்ளன. அதனை நீங்கள் நேரில் பார்க்கும் போதுதான் உணர்வீர்கள். நான் என்ன மாதிரியான படத்தை தரப்போகிறேன் என்பது மட்டும்தான் டிரைலரில் இருக்கும்.

வாரிசு படம் 2 மணிநேரம் 50 நிமிடங்கள் ஓடும். அதில் படத்தின் டிரைலரை வைத்துக்கொண்டு கதை உள்ளிட்டவற்றை ரசிகர்களால் தீர்மானித்து விட முடியாது. வாரிசு படத்தில் நிறைய சுவாரசியமான காட்சிகள் இருக்கின்றன. அதே நேரம், படம் பார்க்க வரும் ரசிகர்கள் ஒருவிதமான மைண்ட் செட்டில் வரவேண்டும் என்பதற்காகத்தான் டிரைலரில் சில காட்சிகளை காண்பித்தோம்.

அவர்கள் ஏதோ ஒரு மனநிலையில் வந்து படத்தைப் பார்த்தால், அது சரியாக இருக்காது என்பதால்தான் டிரைலரில் வாரிசு என்ன மாதிரியான படம் என்பதை சொன்னோம். ரசிகர்களை மனரீதியாக தயார்படுத்த தான் இந்த டிரைலர். தியேட்டரில் படத்தைப் பார்க்கும்போது ரசிகர்கள் நினைத்த எதுவுமே இருக்காது. அதையும் தாண்டி அவர்களுக்குப் பிடித்தமான விஷயங்கள் தான் இருக்கும்.

கணவருடன் ஜாலி வெக்கேஷனில் ஹன்சிகா... வைரல் போட்டோஸ்!

எமோஷன், நாடக காட்சிகள், ஒவ்வொருத்தருக்கும் தங்கள் வாழ்வில் இடம்பெறும் சம்பவங்கள் தான் படத்தில் இருக்கும். படம் பார்க்கும்போது நீங்கள் உங்கள் அப்பா, அம்மா, சகோதரர்கள் இருந்தால் அவர்கள், குடும்பம் ஆகியோரை கண்டிப்பாக நினைத்து பார்ப்பீர்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

First published:

Tags: Varisu