கூகுள் குட்டப்பா திரைப்படம் ஜூன் 3-ம் தேதி, ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதை அடுத்து சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பூர்வீகா ஷோரூமில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
ஆஹா தமிழ் ஓடிடி தளம் பூர்விகா உடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. பூர்விகாவில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு ஆஹா தமிழ் ஓடிடி தளத்தின் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. அதன்படி கூகுள் குட்டப்பா செய்தியாளர் சந்திப்பு கோடம்பாக்கத்தில் உள்ள பூர்விகா ஷோரூமில் நடைப்பெற்றது. இந்த செய்தியாளர் சந்திப்பில் நடிகர்கள் கே.எஸ்.ரவிக்குமார், தர்ஷன், நடிகை லாஸ்லியா கலந்து கொண்டனர்.
அதில் பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், ’இயக்குனர்கள் பணி என்பது கடினமான பணி தான். நான் நடிப்பதை மிகவும் ரசித்தே நடித்தேன். நேற்று என்னுடைய பிறந்த நாள் என்பதால் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் எனக்கு வாழ்த்து சொன்னார். எங்களுடைய நட்பு அது போன்றது’ என்றார்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்துக் கொள்ளும் பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
எல்லா நடிகைகள் மீதும் எனக்கு கிரஷ் உள்ளது என்றார் தர்ஷன். பின்னர் பேசிய லாஸ்லியா, எனக்கு கொஞ்சம் உடல்நலப் பிரச்னை இருந்தது. திரையில் பார்க்கும் போது உடல் எடையை குறைக்க வேண்டும் போல இருந்தது அதனால் தான் உடல் எடையை குறைத்தேன் என்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.