இந்த உலகம் பொய்களால் ஆனது - நடிகை லாஸ்லியா

இந்த உலகம் பொய்களால் ஆனது -  நடிகை லாஸ்லியா
நடிகை லாஸ்லியா
  • Share this:
இந்த உலகம் பொய்களால் ஆனது என்று கூறியிருக்கும் நடிகை லாஸ்லியா, மக்கள் சந்தோஷத்தை நோக்கி நகர வேண்டும் என்று தான் நினைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய லாஸ்லியா, கடந்த ஆண்டு பிக்பாஸ்3 நிக்ழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியின் மூலம் அதிக ரசிகர்களைக் குவித்த லாஸ்லியா தற்போது திரைத்துறையில் நாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.

ஹர்பஜன் சிங், அர்ஜுன் நடிக்கும் ஃபிரெண்ட்ஷிப் படத்தில் நாயகியாக நடித்து வரும் லாஸ்லியா, நடிகர் ஆரி ஹீரோவாக நடிக்கும் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


திரைத்துறையில் அடியெடுத்து வைத்து சில மாதங்களே ஆகியிருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக லாஸ்லியாவின் ஆபாச வீடியோ என்ற பெயரில் ஒரு வீடியோ அதிகம் சமூகவலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வெளிப்படையாக கருத்துக் கூறாத லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் இந்த உலகம் பொய்களால் ஆனது என்று பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது, “இந்த உலகம் முழுவதும் பொய்களால் ஆனது. நாம் எல்லோரும் சில ஒளியைக் கொண்டிருப்போம். அது நம்முடைய வாழ்க்கையில் இருக்கும். ஆனால், நம்முடைய ஆன்மாவுடன் தனித்திருக்கிறோம் என்பதை ஒரு கட்டத்தில் உணர்வோம். இந்த உலகம் முழுவதும் அச்சம், எதிர்மறை எண்ணங்கள், முன் அனுமானங்களால் ஆனது. மகிழ்ச்சி மற்றும் சந்தோஷத்தை நோக்கி மக்கள் நகர வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.” இவ்வாறு தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார் லாஸ்லியா.
மேலும் படிக்க: பாஜக தொழிலதிபருடன் திருமணமா? கீர்த்தி சுரேஷ் தரப்பு பதில்..!
First published: April 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading