முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஹர்பஜன் சிங் - லாஸ்லியா நடிக்கும் ஃப்ரெண்ட்ஷிப் படத்தின் புதிய அப்டேட்

ஹர்பஜன் சிங் - லாஸ்லியா நடிக்கும் ஃப்ரெண்ட்ஷிப் படத்தின் புதிய அப்டேட்

ஹர்பஜன் சிங்

ஹர்பஜன் சிங்

ஃப்ரெண்ட்ஷிப் படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கித் தயாரிக்கும் படம் ஃப்ரெண்ட்ஷிப். இந்தப் படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் கால் பதிக்க உள்ளார் பிக்பாஸ் லாஸ்லியா. வில்லனாக பிரபல நடிகர் அர்ஜூனும், நகைச்சுவை கேரக்டரில் சதீஷூம் நடிக்கின்றனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடிய ஹர்பஜன் சிங் தனது தமிழ் ட்வீட்டுகளால் தமிழகத்தில் ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். இந்நிலையில் ஃப்ரெண்ட்ஷிப் படத்தில் ஹீரோவாக ஹர்பஜன் சிங்கும் வில்லனாக அர்ஜூனும் நடித்து வருவதால் படத்தின் மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் பிக்பாஸ் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற லாஸ்லியாவையும் திரையில் காண அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஃப்ரெண்ட்ஷிப் படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாகவும், மும்முரமாக படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. அதனுடன் லாஸ்லியா, ஹர்பஜன் சிங், நகைச்சுவை நடிகர் சதீஷ் நடனமாடும் புகைப்படம் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. விரைவில் படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்பிருக்கிறது.

படம் குறித்து ட்வீட்டியிருக்கும் ஹர்பஜன் சிங், “தமிழனின் தாய்மடி கீழடி. தமிழ்நாடு என்னை அரவணைக்கும் ஒரு அன்னைமடி!

எந்த சொல்லிலும் அடங்காது வேஷ்டி கட்டிய தருணம். இந்த கோடைக்கு நம்ம படம் ஃப்ரெண்ட்ஷிப் வருது. தளபதி, தல படம் மாதிரி நீங்க கொண்டாடலாம்” என்று கூறியுள்ளார்.

First published:

Tags: Harbhajan Singh, Kollywood, Losliya