லாஸ்லியாவுக்கு உதவிய விஜய் டிவி - வனிதா பகிர்ந்த தகவல்

தந்தையுடன் லாஸ்லியா | வனிதா விஜயகுமார்

லாஸ்லியா இலங்கை செல்ல விஜய் டிவி குழுவினர் உதவி செய்து வருவதாக நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கடந்த ஆண்டு கலந்து கொண்டவர் லாஸ்லியா. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் ஹர்பஜன் சிங், அர்ஜூன் உள்ளிட்டோர் நடிக்கும் ‘பிரண்ட்ஷிப்’, நடிகர் ஆரி அர்ஜூனாவுடன் ஒரு புதிய படம் என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு வந்தன. இந்நிலையில் கனடாவில் வேலை செய்து வரும் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவரது மரண செய்தி லாஸ்லியாவையும் அவரது குடும்பத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

10 ஆண்டுகளுக்கும் மேலாக தந்தையை நேரில் பார்க்காத லாஸ்லியா, பிக்பாஸ் வீட்டில் நேரில் சந்தித்தார். அப்போது தந்தை - மகளுக்கிடையேயான உரையாடலும், மகளின் மீது அப்பா வெளிப்படுத்திய அன்பும் பிக்பாஸ் ரசிகர்களை கண்கலங்க வைத்து உணர்ச்சியால் கட்டிப் போட்டது. இதையடுத்து ஒரே நாளில் மரியநேசன் உலகறிந்த நபராக மாறினார்.

தற்போது அவரது மறைவை அறிந்த லாஸ்லியாவின் ரசிகர்களும், பிக்பாஸ் பார்வையாளர்களும் சமூகவலைதளத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் லாஸ்லியாவுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை வனிதா விஜயகுமார் தனது ட்விட்டர் பக்க பதிவில், நான் லாஸ்லியாவுடன் சற்றுமுன் பேசினேன். அவர் அழுது கொண்டு இருந்தாலும் மன உறுதியுடன் இருக்கிறார். அவர் இலங்கைக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.விஜய் டிவி குழுவினர் இந்திய - இலங்கை தூதரகத்தில் பேசி லாஸ்லியாவை இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்து வருகிறார்கள். லாஸ்லியாவின் தந்தை கனடாவில் காலமானதை அடுத்து, தற்போது உள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அவருடைய உடல் இலங்கைக்கு வருவதற்கு இன்னும் ஒரு சில நாட்களாகும். லாஸ்லியாவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் என்னுடைய அன்பையும் தெரிவித்தேன்” என்று வனிதா விஜயகுமார் குறிப்பிட்டுள்ளார்.
Published by:Sheik Hanifah
First published: