’நான் நன்றாக இருக்கிறேன்’ மரணமடைந்ததாக வெளியான வதந்திக்கு லொள்ளு சபா மாறன் முற்றுப்புள்ளி

மாறன்

'லொள்ளு சபா' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மூலம் பிரபலமான மாறன், சந்தனத்தின் 'ஏ 1' உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

 • Share this:
  தான் இறந்து விட்டதாக வந்த செய்திகளில் உண்மை இல்லை எனவும், தான் பாதுகாப்பாக இருப்பதாகவும் லொள்ளு சபா மாறன் தெரிவித்துள்ளார்.

  நேற்று காலை பிரபல நகைச்சுவை நடிகர் மாறன் என்கிற மணிமாறன் தனது 48-வது வயதில் கோவிட் 19 நோய்த்தொற்று காரணமாக காலமானார். 'கில்லி', 'தலைநகரம்', 'பாஸ் என்கிற பாஸ்கரன்', 'கே.ஜி.எஃப் அத்தியாயம் 1' மற்றும் வரவிருக்கும் 'சர்பட்டா பரம்பரை' உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.

  இந்நிலையில் சில அச்சு மற்றும் வலைதள ஊடகங்கள் மாறனின் மரண செய்தியில், மற்றொரு நகைச்சுவை நடிகரான லொள்ளு சபா மாறனின் புகைப்படத்தை தவறாக வெளியிட்டன. இதனால் அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் கவலையில் ஆழ்ந்தனர். 'லொள்ளு சபா' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மூலம் பிரபலமான மாறன், சந்தனத்தின் 'ஏ 1' உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

  இதையடுத்து அவர் ஒரு வீடியோ மூலம் தான் இறந்ததாக வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதில் தான் நலமாக இருப்பதாகவும், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை காலத்தில் மக்கள் தங்களை தீவிரமாக கவனித்துக் கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: