தமிழ் ரசிகர்கள் மத்தியிலே லொள்ளு சபா மிகவும் பிரபலமான ஒன்று. கடந்த 2003 முதல் 2008 வரை விஜய் தொலைக்காட்சியில் வந்த ஒரு நிகழ்ச்சியில் பல படங்களையும் தங்கள் பாணியில் கலாய்த்து தமிழ் ரசிகர்களை ஸ்பூஃப் நகைச்சுவைகளுக்கு ரசிக்க வைத்தவர்கள். இந்த லொள்ளு சபாவின் மூலம் தான் சந்தானம், சுவாமிநாதன் போன்ற பல நகைச்சுவை நாயகர்கள் திரையுலகிற்கு அறிமுகமானார்கள். இந்நிலையில் இந்த டீம் மீண்டும் தமிழ் ரசிகர்களை சிரிக்க வைக்க வருகிறார்கள் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது பிரேக்கிங் பேட் சீரிஸை இந்த லொள்ளு சபா குழுவினர் ஸ்பூஃப் செய்துள்ளதை நெட்பிளிக்ஸ் நாளை (20.01.2023) வெளியிடுகிறது. இதில் வால்டர் வைட் காதாப்பாத்திரத்தை நகைச்சுவை நடிகர் ஏற்று நடித்துள்ளார். இதன் ட்ரெய்லரை தென்னிந்தியாவின் நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. வால்டர் வைட்டின் மிகவும் பிரபலமான வசனத்தை சுவாமிநாதன் தெரிவித்து ஸ்பூஃப் செய்திருக்கிறார்.
"Mannenna. Vepenna. Velakkena, series mudinju pona enakkena?" nu solli Breaking Bad-ah spoof panna varanga.
Joking Bad, a Breaking Bad spoof, arrives on 20th January at 6pm on Netflix India's YouTube channel. pic.twitter.com/OC0nGwmsM4
— Netflix India South (@Netflix_INSouth) January 18, 2023
இதனை "The Boys Are Back" என்று அந்த ட்ரெய்லரில் நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. மீண்டும் லொள்ளு சபா நாயகர்கள் வருவது அதன் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியை நாளை (20.01.2023) மாலை 6 மணிக்கு நெட்பிளிக்ஸ் இந்தியாவின் யுடியூப் சேனலில் காணலாம் என அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Santhanam, Netflix, TV series, Web series