சமூக வலைதளங்களில் இருந்து விலகிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
சமூக வலைதளங்களில் இருந்து விலகிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ் டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தார். ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் இருந்து சிறிது காலம் விலகி இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து சிறிது காலம் விலகி இருப்பதாக அறிவித்துள்ளார்.
மாநகரம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படம் அவரை மேலும் பிரபலப்படுத்தியது. அத்துடன் நடிகர் விஜய்யை மாஸ்டர் திரைப்படத்தில் இயக்கம் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது.
அந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக லோகேஷ் கனகராஜ் உயர்ந்தார். இவருடைய இயக்கத்தில் இறுதியாக வெளியான விக்ரம் திரைப்படம் உலக அளவில் 400 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. அதேபோல் தமிழகத்தில் 170 கோடி ரூபாய் வசூல் செய்தது.
இதன் மூலம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த திரைப்படங்கள் என்ற பட்டியலில் விக்ரம் மற்றும் மாஸ்டர் ஆகியவை முதல் இரண்டு இடத்தில் உள்ளன. இந்த நிலையில் அவர் அடுத்ததாக விஜய் நடிக்கும் படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தார். ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் இருந்து சிறிது காலம் விலகி இருப்பதாக அறிவித்திருக்கிறார். இருந்தாலும் தன்னுடைய அடுத்தப் படத்தின் அறிவிப்பு மூலம் விரைவில் சமூக வலைதள பக்கத்திற்கு வருவேன் எனவும் தெரிவித்திருக்கிறார்.
Hey guys ✨
I'm taking a small break from all social media platforms...
I'll be back soon with my next film's announcement 🔥
Till then do take care all of you..
With love
Lokesh Kanagaraj 🤜🏼🤛🏼
விஜயின் திரைப்பட வேளையில் முழு கவனம் செலுத்தவே சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து லோகேஷ் கனகராஜ் விலகி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.