முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ’நன்றி விஜய் அண்ணா’.. பிறந்தநாள் அன்று நெகிழ்ச்சியாக பதிவிட்ட லோகேஷ் கனகராஜ்!

’நன்றி விஜய் அண்ணா’.. பிறந்தநாள் அன்று நெகிழ்ச்சியாக பதிவிட்ட லோகேஷ் கனகராஜ்!

லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய்

லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய்

எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி விஜய் அண்ணா என்று தனது பிறந்த நாளில் லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட டிவிட்டர் பதிவி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் சினிமாவில் யாரிடமும் உதவியாளராக இல்லாமல் இயக்குனராக சாதித்தவர்களில் தற்பொழுது மிக முக்கியமான பெயராக மாறியிருக்கும் லோகேஷ் கனகராஜ்,  2017ம் ஆண்டு சந்தீப் கிஷான், ஸ்ரீ நடிப்பில் வெளியான மாநகரம் படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானார். அடுத்த திரைப்படமான கைதியில் நாயகி இல்லாமல், பாடல்கள் இல்லாமல் ஒரு திரைப்படத்தை வணிக ரீதியில் வெற்றி பெற வைக்க முடியும்  என்பதை நிரூபித்துக் காட்டினார். அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

முதல் இரண்டு திரைப்படங்களில் சொல்லி வைத்து சிக்ஸர் அடித்ததால் மூன்றாவது திரைப்படத்திலேயே நடிகர் விஜய்யை இயக்கும் வாய்ப்பை பெற்ற லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் திரைப்படத்தை வெற்றி திரைப்படமாக மாற்றிக் காட்டினார். விஜய்யின் மாஸ்டர் படத்தின் மூலம் முன்னணி இயக்குனராகவும் முன்னேறினார் லோகேஷ். 

சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தின் மூலம் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட முன்னணி திரைபிரலங்களை நடிக்கவைத்து புதிய அத்தியாயம் படைத்தார். கட்சிப் பணிகளால் நான்கு ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி இருந்த கமலால் இனி ஒரு வெற்றி திரைப்படத்தை கொடுக்க முடியுமா என்ற கேள்விகளை சுக்கு நூறாக உடைத்தெறிந்த லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் முதல் 400 கோடி வர்த்தகமான திரைப்படம் என்ற சாதனையை விக்ரம் திரைப்படம் படைக்க காரணமாக இருந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் விஜயுடன் கூட்டணி அமைத்த லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை இயக்கி வருகிறார். லியோ படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பீஸ்ட் படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார். இயக்குனர் மிஷ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்‌.

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், லோகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து 'எல்லாவற்றிற்கும் மிகவும் நன்றி விஜய் அண்ணா' என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vijay, Lokesh Kanagaraj