Home /News /entertainment /

லோகேஷ் கனகராஜும் பழைய பாடல்களும்!

லோகேஷ் கனகராஜும் பழைய பாடல்களும்!

லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் பழைய பாடல்களுக்கு புத்துயிர் அளிப்பதில் கைதேர்ந்தவர் என்பது நிரூபணமானது.

    தமிழ் சினிமாவின் தற்போதைய நம்பிக்கை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது படங்களில் பயன்படுத்திய பழைய பாடல்கள் பற்றிய ஒரு பார்வை. 

    தனது முதல் படைப்பான ’மாநகரம்’ திரைப்படத்திலேயே மக்களின் கவனம் பெற்றவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த ‘கைதி’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் இருந்து லோகேஷ் கனகராஜ் பழைய பாடல்களுக்கு புத்துயிர் அளிப்பதில் கைதேர்ந்தவர் என்பது நிரூபணமானது. படத்தின் ஒரு காட்சியில் காவல் நிலையத்தை சுற்றி வளைத்த ரவுடிகளிடம் இருந்து தப்பிக்க ஜும்பலக்கா ஜும்பலக்கா பாடலையும் மற்றும் அர்ஜுன் தாஸ் நடந்து வரும் போது ’மறுபடியும்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’ஆசை அதிகம் வச்சு’ பாடலையும் ஒலிக்க வைத்து மீண்டும் அப்பாடலை வைரல் ஆக்கினார் லோகேஷ் கனகராஜ்.

    விக்ரம் படத்தின் உதவி இயக்குனர்கள் 13 பேருக்கு பைக் பரிசளித்த கமல்…

    தமிழ் சினிமாவின் தளபதி விஜயை வைத்து லோகேஷ் இயக்கிய ‘மாஸ்டர்’ மாஸ் ஹிட்டானது. இப்படத்திலும் ஒரு பழைய பாடலை ட்ரெண்டாக்கினார். சலூன் கடையில் மாளவிகா மோகனன் பதுங்கியிருக்கும் ஒரு காட்சியில் இளையராஜா இசையமைத்த ‘புது நெல்லு புது நாத்து’ படத்தில் இடம்பெற்ற ‘கருத்த மச்சான்’ எனும் பாடலை ஒலிக்கவிட்டு மீண்டும் அப்பாடலை ஹிட்டாக்கினார்.

    அஜித் – சிம்ரனின் எவர்கிரீன் காதல் பாடல்கள்…!

    உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்’ கலக்ஷனில் களை கட்டி பெரும் வெற்றி பெற்றது. இத்திரைப்படத்திலும் தன் வழக்கமான பாணியில் ஒரு பழைய பாடலை ஒலிக்கவிட்டு ட்ரெண்டாக்கினார் லோகேஷ். அருண்பாண்டியன் நடிப்பில் 1995 இல் வெளியான ’அசுரன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’ சக்கு சக்கு வத்திக்குச்சி’ பாடலை விக்ரமில் கமல்ஹாசனுக்கு ஒலிக்கவிட்டு தியேட்டரில் ரசிகர்களின் விசில் பறக்க வைத்துள்ளார் லோகேஷ்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Kamal Haasan, Lokesh Kanagaraj, Vikram

    அடுத்த செய்தி