கமலின் விக்ரம் படத்தை தொடர்ந்து சூர்யாவின் இரும்பு கை மாயாவி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற ப்ளாக் பஸ்டர் படங்களை கொடுத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவரின் படங்கள் எல்லாம் தனித்துவமான கதையம்சம் கொண்ட கதைகளை உள்ளடக்கியதாக இருக்கும்.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் அடுத்த மாதம் 3ம் தேதி வெள்ளிக்கிழமையன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ஏற்கனவே கமல் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படம் 1986ல் வெளிவந்து சாதனை படைத்தது. அதே டைட்டில் தற்போது பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த படத்தில் கவுரவ தோற்றத்தில் சூர்யா இடம்பெற்றுள்ளார். படத்தில் கமலின் மகன் அவர்தான் என்றும், அவர் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில் சூர்யாவின் கேரக்டர் குறித்த கேள்விக்கு கமல் கூறியிருப்பதாவது, படத்தில் கடைசி நிமிடங்களில் சூர்யா இடம்பெறுகிறார். அவரது கேரக்டர், படத்தின் கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். அது விக்ரம் 3வது பாகமாகக் கூட இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது, சூர்யாவின் இரும்பு கை மாயாவி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் முடிந்துவிட்டதாகவும் சினிமா வட்டாரங்கள் தகவல்களை தெரிவித்துள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.