ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நடிகராக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ்?

நடிகராக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ்?

லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ்

படத்தில் வரும் ஒரு முக்கியமான காட்சியில் லோகேஷ் கனகராஜாகவே அவர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தளபதி 67 படத்தை இயக்குவதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

  லோகேஷ் கனகராஜ் தனது இரண்டாவது படமான 'கைதி' படத்திலிருந்து அதிகம் விரும்பப்படும் இயக்குநராக மாறிவிட்டார். அந்தப் படம் அவரை உச்சத்திற்கு அழைத்துச் சென்றது. லோகேஷ் அடுத்து தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' படத்தை இயக்கினார். பின்னர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் மற்றும் சூர்யா நடித்த 'விக்ரம்' என்ற ஆல் டைம் பிளாக்பஸ்டர் ஹிட்டை கொடுத்தார்.

  தற்போது தளபதி விஜய் மற்றும் நிவின் பாலி, த்ரிஷா, விஷால், சஞ்சய் தத், மிஷ்கின் மற்றும் கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பதாகக் கூறப்படும் தனது அடுத்தப் படமான 'தளபதி 67' படத்தின் முன் தயாரிப்பு வேலைகளில் மூழ்கியுள்ளார் லோகேஷ்.

  இதற்கிடையே இயக்குநர் கோகுல் இயக்கும் புதிய படமான ‘சிங்கப்பூர் சலூன்’ மூலம் லோகேஷ் நடிகராக அறிமுகமாகிறார் என்று கோலிவுட்டில் பலத்த சலசலப்பு நிலவுகிறது. அந்தப் படத்தில் வரும் ஒரு முக்கியமான காட்சியில் லோகேஷ் கனகராஜாகவே அவர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

  அனல் மேலே பனித்துளி ஆண்ட்ரியாவின் அட்டகாச படங்கள்!

  'சிங்கப்பூர் சலூன்' படத்தில் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் ஷிவானி நாராயணன் முக்கிய வேடத்தில் நடிக்க, வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Lokesh Kanagaraj