நடிகர் விஜய்யின் தளபதி 67 படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குவார் எனத் தெரிகிறது.
நடிகர் விஜய் தற்போது இயக்குநர் வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் உருவாகிவரும் படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், அவரது அடுத்த படமான 'தளபதி 67' படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்தும் ஏற்கனவே பல யூகங்கள் எழுந்துள்ளன. இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
விஜய்யின் 'மாஸ்டர்' இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில், தளபதி 67 படத்தின் மூலம் மீண்டும் விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து சூசகமாகத் தெரிவித்துள்ளார். ஜூன் 3-ஆம் தேதி விக்ரம் படம் வெளியான பிறகு, அந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார். 'மாஸ்டர்' படப்பிடிப்பின் போது விஜய்யிடம் ஒரு சுவாரஸ்யமான லைனை சொன்ன லோகேஷ், இப்போது அதை முழுக் கதையாக உருவாக்கியுள்ளதாக தெரிகிறது.
எனக்கு வாய்ப்பு தர என் அம்மாவை அட்ஜஸ்ட் செய்ய சொன்னார்கள் - பகீர் கிளப்பிய செந்தூரப்பூவே ஸ்ரீநிதி
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விஜய் - லோகேஷ் கனகராஜ்
இதற்கிடையே, கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விக்ரம்' திரைப்படம் ஜூன் 3-ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஆக்ஷன் கலந்த படத்தின் டிரைலர் ஏற்கனவே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் நடிகர் விஜய், வம்சி பைடிப்பள்ளியுடன் இணைந்து 'தளபதி' 66 படத்தில் பணிபுரிந்து வருகிறார். இது ஜனவரி 2023-ல் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.