முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பாலிவுட் செல்லும் லோகேஷ் கனகராஜ்? ஹீரோ யார் தெரியுமா?

பாலிவுட் செல்லும் லோகேஷ் கனகராஜ்? ஹீரோ யார் தெரியுமா?

லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய்யின் 67-வது படத்தை இயக்கவுள்ளார். தற்போது அவர் அதன் ப்ரீ புரொடக்ஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

  • Last Updated :

நடிகர் சல்மான் கானை வைத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தியில் படம் ஒன்றை இயக்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘விக்ரம்’ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தற்போது நடிகர் சல்மான் கானை வைத்து இந்தியில் படம் ஒன்றை இயக்கவிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. தெலுங்கு சினிமா துறையின் ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிப்பதாக தெரிகிறது. இதற்காக லோகேஷ் கனகராஜும், தயாரிப்பு தரப்பும் பேச்சு வார்த்தையை தொடங்கியிருக்கிறார்களாம்.

இறுதிக்கட்ட பேச்சு வார்த்தைகள் முடிந்தவுடன் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு லோகேஷ் கனகராஜ் அதற்கு முன் சில கமிட்மென்டுகளை வைத்திருப்பதால், சல்மான் கானின் படம் வெளியாக சிறிது காலமாகும்.

லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய்யின் 67-வது படத்தை இயக்கவுள்ளார். தற்போது அவர் அதன் ப்ரீ புரொடக்ஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 67' என்று பெயரிடப்பட்டுள்ளது, இதன் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் இணையும் இரண்டாவது படமாக இந்தப் படம் இருக்கும்.

காபி வித் கரண் நிகழ்ச்சியில் சமந்தாவை அலேக்காக தூக்கிய அக்‌ஷய் குமார்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos

    இதற்கிடையில், லோகேஷ் கனகராஜ் தென்னிந்திய சினிமாவில் மிகவும் வெற்றிகரமான இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ளார். அவர் இயக்கத்தில் கமல்ஹாசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து, சமீபத்தில் வெளியான 'விக்ரம்' மாபெரும் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Lokesh Kanagaraj, Salman khan