• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விக்ரம் ஷுட்டிங் ஸ்பாட் படத்தை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்!

விக்ரம் ஷுட்டிங் ஸ்பாட் படத்தை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்!

விக்ரம் படப்பிடிப்பு தளம்

விக்ரம் படப்பிடிப்பு தளம்

பகத் பாசில், விஜய் சேதுபதியுடன் இருக்கும் படப்பிடிப்புத்தள புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார்.

  • Share this:
    விக்ரம் படத்தின் புதிய ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார்.

    விக்ரம் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்தில் கமல், பகத் பாசில், விஜய் சேதுபதி நடிக்கின்றனர். க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு. அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. சில தினங்கள் முன்பு இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு தொடங்கியதாக லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், பகத் பாசில், விஜய் சேதுபதியுடன் இருக்கும் படப்பிடிப்புத்தள புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார். இந்த இரண்டாவது ஷெட்யூல்டில் பகத், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படகின்றன. இதனை லோகேஷ் பகிர்ந்துள்ள படம் உறுதி செய்கிறது.



    மிகப்பிரமாண்டமாக தயாராகும் விக்ரம் படத்தை அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: