தனிப்பட்ட முறையில் லோகேஷ் கனகராஜுக்கு கமல் பாராட்டி எழுதிய கடிதத்தை லோகேஷ் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது, நன்றி ஆண்டவரே என்று கமலைக் குறிப்பிட்டுள்ள லோகேஷ் இந்த கடிதம் தனக்கு லைஃப் டைம் செட்டில் மென்ட் என்று கூறியுள்ளார்.
லோகேஷை விட கமலை இப்படியொரு மாஸ்ஸான கேரக்டரில் கொண்டு வர யாராலும் முடியாது என்பதை கடந்த வாரம் வெளியான விக்ரம் திரைப்படம் நிரூபித்துள்ளது. கோபம், அழுகை, கண்ணீர், காமெடின், ஹியூமர் சென்ஸ் என மொத்த வித்தைகளையும் கமல் இந்த படத்தில் இறக்கியிருப்பார்.
ஒவ்வொரு ஃப்ரேமிலும் கமலை வேற லெவலில் காட்டிய லோகேஷ் கனகராஜை கமலின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இவ்வளவு பெரிய சம்பவத்தை செய்திருந்தாலும், லோகேஷ் மிக நிதானமாக எளிமையான முறையில் நேர்காணலை அளித்து வருவது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது.
இதையும் படிங்க - முன்னணி நடிகர்களுக்கு இணையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு பிரமாண்ட கட்-அவுட்…
இதற்கிடையே லோகேஷுக்கு கமல் தனிப்பட்ட முறையில் எழுதியுள்ளார். அதனை கமலின் அனுமதியுடன் ட்விட்டரில் லோகேஷ் பதிவிட்டுள்ளார். அந்த கடிதத்தில் கமல் கூறியிருப்பதாவது-
அன்ப லோகேஷ்,
பெயருக்கு முன் ‘திரு’ போடாமல் விட்டது விபத்தல்ல. திரு. கனகராஜ் அவர்களுக்கு உங்கள்பால் உள்ள உரிமையை உங்களைக் கேட்காமலேயே நான் எடுத்துக் கொண்டு விட்டேன்.
இது நமக்குள்ளான தனிப்பட்ட கடிதம் என்பதால் மற்றபடி உங்கள் சாதனைக்கான பதவிக்கான மரியாதை பழயபடியே தொடரும், பொது வெளியில்.
என் ரசிகர்கள் மற்ற ரசிகர்களை விட வித்தியாசமாக இருப்பது அவசியம் என்ற என் ஆசை பேராசை என்றனர் என் விமர்சகர்கள்.
இதையும் படிங்க - அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…
ஆனால் அதையும் தாண்டி என் முன்னணி ரசிகர், முன்னணி திறமையாளராகவும் இருப்பதுதான் நான் ஆசைப்பட்டதை விட அதிகம்.
உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று நான் உள்பட யார் சொன்னாலும் நம்ப வேண்டாம்.
யூடியூபை திறந்தால் வார்த்தைகளின் களஞ்சியமே தென்படும்.
அயராது விழித்திருங்கள், தனித்திருங்கள், பசித்திருங்கள்…
உங்கள் அன்னப் பாத்திரம் என்றும் நிறைந்திருக்கும்.
உங்கள்
நான்
கமல்ஹாசன்.
இவ்வாறு கமல் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த 2 பக்க கடிதம் வைரலாகி வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.