Home /News /entertainment /

சூர்யா - லோகேஷ் கனகராஜின் இரும்பு கை மாயாவி சூப்பர் அப்டேட்!

சூர்யா - லோகேஷ் கனகராஜின் இரும்பு கை மாயாவி சூப்பர் அப்டேட்!

லோகேஷ் கனகராஜ் - சூர்யா

லோகேஷ் கனகராஜ் - சூர்யா

'இரும்பு கை மாயாவி' காமிக் நாவலான 'தி ஸ்டீல் கிளா'விலிருந்து ஈர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    இரும்பு கை மாயாவி படத்தை தொடங்க நடிகர் சூர்யா ஆர்வமாக இருப்பதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' படத்தில் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இதையடுத்து சூர்யாவும் கோலேஷும் எப்போது இணைந்து பணிபுரிவார்கள் என்பதை அறிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 'விக்ரம்' படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தாலும், நடிகர் சூர்யா 'இரும்பு கை மாயாவி' படத்தில் ஆர்வமாக இருப்பதாகத் தெரிகிறது.



    கடந்த ஐந்து வருடங்களாக புராசஸில் இருக்கும் 'இரும்பு கை மாயாவி' படத்தின் கதையை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே சூர்யாவிடம் கூறியிருக்கிறார். அந்த படம் எதிர்பார்த்தபடி தொடங்காத நிலையில், 'தளபதி 67' படத்தில் விஜய்யுடன் இணையவிருக்கிறார் லோகேஷ். அதோடு 'இரும்பு கை மாயாவி' படத்தை தொடங்குவதில் சூர்யா ஆர்வமாக இருப்பதாகவும், படத்தைப் பற்றி அடிக்கடி கேட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

    லைக்ஸை குவிக்கும் காஜல் அகர்வாலின் குடும்பப் படம்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    'இரும்பு கை மாயாவி' காமிக் நாவலான 'தி ஸ்டீல் கிளா'விலிருந்து ஈர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த படம் ஒரு சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட், இதில் கதாநாயகன் ஒரு விபத்தில் ஒரு கையை இழக்கிறான், பின்னர் மெட்டல் கையால் குற்றங்களை எதிர்த்துப் போராடுகிறான். ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் 8 மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வருவதாக இயக்குனர் முன்பு தெரிவித்திருந்தார். இதற்கிடையே இந்தப் படத்தில் சூர்யாவும் ஆர்வமாக இருப்பதால், எப்போது வேண்டுமானாலும் இந்தப் படம் தொடங்கப்படலாம் எனத் தெரிகிறது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Suriya, Lokesh Kanagaraj

    அடுத்த செய்தி