Home /News /entertainment /

விக்ரம் படத்தில் சூர்யா நடித்துள்ளார் - ரகசியத்தை போட்டுடைத்த லோகேஷ் கனகராஜ்

விக்ரம் படத்தில் சூர்யா நடித்துள்ளார் - ரகசியத்தை போட்டுடைத்த லோகேஷ் கனகராஜ்

சூர்யா, லோகேஷ் கனகராஜ்

சூர்யா, லோகேஷ் கனகராஜ்

விக்ரம் படத்தில் சூர்யா சார் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய லோகேஷ் கனகராஜ், ‘10 - 11 ஆண்டுகளுக்கு முன்னர் நான் அழ்வார்பேட்டையில் சாம்கோ ஹோட்டல் முன்பு கமல் சாரைப் பார்க்கவேண்டும் என்று ஏங்குவேன். தற்போது அவரை இயக்கும் வாய்ப்பை எனக்கு அவர் கொடுத்துள்ளார். விஜய் சேதுபதி விக்ரம் படத்துக்காக பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி எடுத்தார்.

    இந்தப் படத்துக்கு பயிற்சியாளர் தேவை என அவர் உணர்ந்துகொண்டார். அவருடைய சொந்த பயிற்சியாளரை படப்பிடிப்பு தளத்துக்கு அழைத்து வந்தார். ஃபகத் பாசிலின் படங்களைப் பார்த்த பிறகு அவர் மிகவும் அமைதியானவர் என்று நினைத்து கொண்டிருந்தேன். ஆனால், விக்ரம் பட படப்பிடிப்பு தொடங்கிய பிறகு மிகக் குறைந்த நாளில் நாங்கள் இருவரும் நண்பர்களாகிவிட்டோம். விக்ரம் படத்துக்காக உதவி இயக்குநர் இரவு பகல் பாராமல் உழைத்தார்கள்.

    இந்த ஆண்டின் இறுதியில் இதில் நிறைய பேர் அவர்கள் சொந்தப் படத்தை இயக்க உள்ளார்கள். இந்த விஷயத்தை சஷ்பென்ஷா வைக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் வெளியே தெரிந்துவிட்டது. இப்போ சொல்லிடுறேன். விக்ரம் படத்தில் சூர்யா சார் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

    கடந்த 10 ஆண்டுகளாக நான் இயந்திரம் போல ஓடிக்கொண்டிருக்கிறேன். கமல் சார் அதற்கான உத்வேகம். கொரோனாவிலிருந்து மீண்ட உடன் உடனடியாக அவர் விக்ரம் படத்தின் இறுதிக் காட்சி படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

    ஸ்டாலின் அரசியலில் அந்தப்பக்கம் நிற்கிறார்: நான் இந்த பக்கம் நிற்கிறேன் -கமல்ஹாசன் பேச்சு

    இரவு 2 மணிக்கு ட்ரைசெப்ஸ்க்கான காட்சி எடுக்க வேண்டியிருந்தது. எவ்வளவு நேரம் அந்தக் காட்சி எடுக்க வேண்டும் என்று கமல் சார் என்னிடம் கேட்டார். நான் ஐந்து நிமிடம் என்று கூறினேன். உடனே அவர் 26 புஷ்அப்களை எடுத்தார். அதனையும் நாங்கள் எங்களுடைய விக்ரம் மேக்கிங் வீடியோவில் சேர்த்துள்ளோம்.

    எங்களுடைய முழு பலத்தையும் செலுத்தி எங்களுடைய சிறந்த உழைப்பை விக்ரம் படத்துக்கு கொடுத்துள்ளோம். இது உண்மையான வெற்றியாக அமையும் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று தெரிவித்தார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Actor Suriya, Kamal hassan, Lokesh Kanagaraj

    அடுத்த செய்தி