Home /News /entertainment /

கமல்ஹாசன் கொடுத்த நம்பிக்கையில் அடுத்த படத்தை தொடங்குகிறேன் - லோகேஷ் கனகராஜ்

கமல்ஹாசன் கொடுத்த நம்பிக்கையில் அடுத்த படத்தை தொடங்குகிறேன் - லோகேஷ் கனகராஜ்

கமலுடன் லோகேஷ் கனகராஜ்

கமலுடன் லோகேஷ் கனகராஜ்

கமல்ஹாசன் கொடுத்த நம்பிக்கையில் அடுத்தப் படத்துக்கு செல்கிறேன் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

விக்ரம் திரைப்படத்தை தமிழகத்தில் 75 கோடி ரூபாய் ஷேர் வந்துள்ளது என விநியோகஸ்தர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விக்ரம் படத்தின் பெருவெற்றியைத் தொடர்ந்து திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு நன்றி கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின், லோகேஷ் கனகராஜ், அனிருத் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ‘டான் வெற்றி விழாவில் பேசும்போது நான் சில உண்மைகளை கூறினேன். அது போல இந்த திரைப்பட வெற்றி விழாவிலும் சில உண்மைகளை நான் கூறுகிறேன்.

விக்ரம் திரைப்படத்தை முதலில் பார்த்தவன் நான். இன்டர்வல் முடிந்ததும் இது மாதிரியான ஒரு இன்டர்வல் சீன் வந்ததில்லை என கூறினேன். விக்ரம் திரைப்படம் ஹிட்டாகும் என நினைத்தோம்,  ஆனால் சத்தியமாக இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என நினைக்கவில்லை என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் தமிழகத்தில் விக்ரம் திரைப்படத்தை விநியோகம் செய்த அடிப்படையில் கூறுகிறேன், இந்த திரைப்படம் மூன்றாவது வாரத்தில் நுழைந்துள்ளது. இதுவரை மட்டும் 75 கோடி ரூபாய் ஷேராக கிடைத்துள்ளது என கூறியுள்ளார். விக்ரம் திரைப்படம் தமிழகத்தில் திரையரங்கு உரிமையாளர்களுக்கு 30%, விநியோகஸ்தருக்கு 70% என்ற சதவிகித அடிப்படையில் வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் தற்போது 75 கோடி ரூபாய் ஷேர் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் அனிருத் பேசுகையில், ’விக்ரம் மறக்க முடியாத பயணம். ஆடியோ வெளியீட்டு விழாவில் படம் சிறப்பாக வந்திருப்பதாக கூறினேன். அதை இன்று ரசிகர்கள் உண்மையாக்கி உள்ளனர். அவர்களுக்கு நன்றி. என்னிடம் கேரளாவில் கமல்ஹாசன் என்ன பரிசு கொடுத்தார் என உசுப்பேற்ற கேட்டனர்.  அதற்கு விக்ரம் திரைப்படமே எனக்கு கிடைத்த பரிசு என்று கூறினேன் என தெரிவித்தார். அத்துடன் இந்த திரைப்படத்தில் பணியாற்றியதன் மூலம் கமல்ஹாசன் படத்திற்கு இசை அமைக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியதாக அனிருத் கூறினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய லோகேஷ் கனகராஜ், ’லோகேஷ் யுனிவர்ஸ் என்று அனைவரும் சொல்லும் போது பயமாக இருக்கிறது. இந்த திரைப்படத்தை எழுதியதற்கு கொரோனாவிற்கு நான் நன்றி சொல்ல வேண்டும். அதன் மூலம் எழுதுவதற்கு கொஞ்சம் நேரம் கிடைத்தது என தெரிவித்தார். கமல்ஹாசன் திரைப்படங்கள் சிறுவயதில் இருந்து பார்த்து எதை செய்தாலும் சின்சியராக இருக்க வேண்டுமென கற்றுக்கொண்டேன்.

விக்ரம் படத்தின் வசூலை மேடையில் ஓபனாக அறிவித்த உதயநிதி ஸ்டாலின்

அந்தவகையிலேயே விக்ரம் திரைப்படத்தை சின்சியராக எடுத்தேன். இந்த திரைப்படம் வெளியாகி வெற்றியடைந்த உடன் கமலஹாசன் தொலைபேசியில் அழைத்து ஓய்வெடுக்க வேண்டாம். அடுத்த படத்தின் வேலையை தொடங்குங்கள் என்று கூறினார். அடுத்த படத்தின் வேலையை நான் தொடங்கி விட்டேன். நீங்கள் கொடுத்த நம்பிக்கையில் அடுத்த (விஜய்) படத்திற்கு செல்கிறேன் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.
Published by:Karthick S
First published:

Tags: Kamal hassan, Vikram

அடுத்த செய்தி