• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • புதிய போஸ்டர், டீஸருடன் தொடங்கும் கமலின் பிறந்தநாள் கொண்டாட்டம்!

புதிய போஸ்டர், டீஸருடன் தொடங்கும் கமலின் பிறந்தநாள் கொண்டாட்டம்!

கமல்

கமல்

விக்ரம் கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் படம். கமலின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நாளை நவம்பர் 7 கமல்ஹாசனின் பிறந்தநாள். அதனை முன்னிட்டு விக்ரம் படத்தின் புதிய போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.

மாஸ் நடிகர்களின் பிறந்தநாள் தமிழகத்தில் ஆரவாரமாக கொண்டாடப்படும். ரசிகர்கள் சொந்தப் பணத்தில் போஸ்டர் அடித்து பேனர் கட்டி தோரணம் அமைத்து அன்னதானம் செய்து வீட்டாரின் திட்டுகளை வாங்கிக் கொள்வார்கள். திரையுலகினர் பத்திரிகைகளில் அவரவர் வசதிக்கேற்ப கால்பக்கத்திலிருந்து முழுப்பக்கம்வரை விளம்பரம் தருவார்கள். நல்லவேளையாக இந்த பத்திரிகை விளம்பரம் சமீபமாக குறைந்திருக்கிறது. அவர்கள் நடித்துவரும் படத்தின் புதிய போஸ்டர், டீஸர் வெளியிடுவது வழக்கமாக நடப்பவை.

கமல் இந்தியன் 2, விக்ரம் என இரு படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் இந்தியன் 2 கோமாவில் உள்ளது. அந்தப் படம் சார்ந்து எந்த அப்டேட்டும் வர வாய்ப்பில்லை. விக்ரம் கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் படம். கமலின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.



பின்னணியில் தீ பறக்க, கையில் ரைபிளை காதலுடன் பிடித்திருக்கிறார் கமல். கூடவே ஒரு அறிவிப்பும் லோகேஷ் கனகராஜால் வெளியிடப்பட்டது. நாளை  - அதாவது இன்று மாலை விக்ரம் படத்தின் டீஸர் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது. The First Glance into the world of VIKRAM awaits you all tomorrow at 6pm என இதனை அறிவித்துள்ளார் லோகேஷ்.

Also read... கனடாவில் பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் குருப்...!

ரஜினி ரசிகர்கள் அண்ணாத்த என்று எகிறி அடிக்கையில் கமல் ரசிகர்களுக்கும் துள்ளிக் குதிக்க ஒன்று வேண்டுமல்லவா. மாலை ஆறுமணிக்கு விக்ரமின் உலகத்தை காண தயாராகுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: