விக்ரம் படத்தின் ஒளிப்பதிவாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்த லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் ஒளிப்பதிவாளர் யார் என்பதை நேற்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

 • Share this:
  மாநகரம் படத்தில் கவனம் ஈர்த்த லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர் என இரண்டே படங்களில் கமல் வரை வந்திருக்கிறார். லோகேஷின் நான்காவது படமாக கமலின் விக்ரம் தயாராகிறது. அரசியல் கலந்த ஆக்ஷன் படமான இதில் பகத் பாசில், அர்ஜுன் தாஸ், நரேன் ஆகியோர் நடிப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இசை அனிருத்.

  விக்ரம் படத்துக்கு க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்யவிருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாக இதனை உறுதி செய்யாமலிருந்தனர். நேற்று க்ரிஷ் காங்காதரனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ், விக்ரம் படத்துக்கு அவர் ஒளிப்பதிவு செய்யவிருப்பதை உறுதி செய்தார்.

  Also Read : சினமாவில் நடிகர், நடிகையாக ஆசையா? நடிக்க வாய்ப்பு தரும் பிரபல தயாரிப்பு நிறுவனம்!

  க்ரிஷ் கங்காதரன் பெங்களூருவில் உள்ள அரசு சினிமா மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் ஒளிப்பதிவு குறித்து படித்துவிட்டு பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் சமீர் தஹிரிடம் உதவியாளராக பணியாற்றினார். க்ரிஷின் திறமையைப் பார்த்த சமீர் தஹிர், தான் இயக்கிய நீலாகாசம் பச்சக்கடல் சுவந்ந பூமி படத்தில் க்ரிஷ் கங்காதரனை ஒளிப்பதிவாளராக்கினார். அவரது கலி படத்திற்கும் க்ரிஷ்ஷே ஒளிப்பதிவு செய்தார்.

  Also Read : பிக்பாஸ் புகழ் சனம் ஷெட்டிக்கு வந்த ஆபாச மெசேஜ்.. சைபர் க்ரைமில் புகார்

  லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் அங்கமாலி டைரிஸ், ஜல்லிக்கட்டு படங்கள் க்ரிஷ் கங்காதரனை நாட்டின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக்கியது. தமிழில் சர்கார் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். விக்ரம் அவரது இரண்டாவது தமிழ்ப் படமாகும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: