ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் திடீர் சந்திப்பு!

ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் திடீர் சந்திப்பு!
லோகேஷ் கனகராஜ் - ரஜினிகாந்த்
  • Share this:
நடிகர் ரஜினிகாந்த இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

பேட்ட படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் ஆதித்யா அருணாசலம் என்ற போலீஸ் கதபாத்திரத்தில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் இவர்களுடன் யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் 2020-ம் ஆண்டின் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இந்தப் படத்தை அடுத்து இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த்.


பார்க்க... படிக்க...ரஜினிகாந்துடன் ஒரு வைரல் செல்ஃபி கிளிக்... பிரணவ்வின் ஆசையை நிறைவேற்றிய சூப்பர் ஸ்டார்!

இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது கைதி படத்தைப் பார்த்து லோகேஷ் கனகராஜுக்கு வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. தற்போது விஜய் நாயகனாக நடிக்கும் தளபதி 64 படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also see:

 
First published: December 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading