முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'விக்ரம்' படத்திலேயே 'லியோ' பற்றி ஹின்ட் கொடுத்த லோகேஷ்? - வீடியோவில் இதை கவனிச்சீங்களா?

'விக்ரம்' படத்திலேயே 'லியோ' பற்றி ஹின்ட் கொடுத்த லோகேஷ்? - வீடியோவில் இதை கவனிச்சீங்களா?

விஜய் - கமல்ஹாசன்

விஜய் - கமல்ஹாசன்

தற்போது லியோ படம் காஷ்மீரில் படமாவதால் இதுவும் எல்சியூவில் வரும் என ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த 3 ஆம் தேதி லியோ படத்தின் ப்ரமோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. டீசரை டிகோட் செய்கிறேன் என்ற பெயரில் படத்தின் கதை இப்படித்தான் இருக்கும் என ரசிகர்கள் தங்கள் யூகங்களை பகிர்ந்துவருகின்றனர்.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக 14 வருடங்களுக்கு பிறகு திரிஷா நடிக்கிறார். இதில் ஹைலைட் என்னவென்றால் விஜய்க்கு மட்டுமல்ல, திரிஷாவுக்கும் இது 67வது படமாம். மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

சமீபத்தில் வெளியான தளபதி 67 பட பூஜை வீடியோவில் நடிகர் மரியம் ஜார்ஜ் இடம்பெற்றிருந்தார். இவர் கைதி படத்தில் நெப்போலியன் என்ற போலீஸ் கான்ஸ்டபிளாக கலக்கியிருப்பார். அதே போல விக்ரம் படத்தல் ஏஜென்ட் டீனாவாக கலக்கிய வசந்தி சமீபத்தில் காஷ்மீர் சென்றுள்ள படக்குழுவில் இடம்பிடித்திருந்தார். தளபதி 67ல் 'கைதி' நெப்போலியனும் 'விக்ரம்' ஏஜென்ட் டீனாவும் இடம்பிடித்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. அந்த புத்தகத்தின் ஒரு பக்கத்தில் செம்பன் வினோத் நடித்துள்ள ஜோஸ் கதாப்பாத்திரம் பேசும் வசனம் இடம்பெற்றுள்ளது. அதில், காஷ்மீருக்கு ஒரு கேஸ் விஷயமாக போயிருந்தப்போ அவன் பழக்கமானான் என அமர் குறித்து பேசும் வசனம் இடம்பெற்றுள்ளது.

தற்போது லியோ படம் காஷ்மீரில் படமாவதால் இதுவும் எல்சியூவில் வரும் என ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். தளபதி விஜய்யின் லியோ குறித்து ரசிகர்களின் அதீத ஆர்வத்தையே இது காட்டுகிறது.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Lokesh Kanagaraj, Vikram