Home /News /entertainment /

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கைதி 2 படத்திற்கு இவர்தான் இசையமைப்பாளர்…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கைதி 2 படத்திற்கு இவர்தான் இசையமைப்பாளர்…

கைதி

கைதி

Kaithi 2 Music Director : கைதி படத்தின் அடுத்த பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது குறித்த பணிகள் ஒருபக்கம் நடந்து வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவாகவுள்ள கைதி 2 படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    2019-ல் வெளிவந்த கைதி படத்தின் முதல் பாகம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. ரூ. 25 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.

    கைதி படத்தின் 99 சதவீத காட்சிகள் இரவில் மட்டுமே படமாக்கப்பட்டிருக்கும். ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களை மிகுந்த சுவாரசியமான திரைக்கதையுடன் ரசிகர்களுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விருந்தாக படைத்திருப்பார்.

    கைதி படத்தில் பாடல்கள் இல்லாவிட்டாலும், பின்னணி இசை மிகப்பெரும் பலமாக அமைந்தது. இந்த படத்தை நினைத்துப் பார்க்கும்போதே அதன் பின்னணி இசை தலைக்குள் ஓடும் அளவுக்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ். தரமான பி.ஜி.எம்மை வழங்கியிருப்பார்.

    இதையும் படிங்க - பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்… ஆவலைத் தூண்டும் வீடியோ 

    இந்நிலையில் சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் கைதி படத்தின் காட்சிகளும், அதன் தொடர்ச்சியும் இடம்பெற்றிருந்தன. படத்தின் க்ளைமேக்ஸிலும் டில்லியான கார்த்தியின் குரல் இடம்பெறுகிறது.

    கைதி படத்தின் அடுத்த பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது குறித்த பணிகள் ஒருபக்கம் நடந்து வருகிறது. அந்த வகையில் கைதி படத்திற்கு இசையமைத்த சாம்.சி.எஸ்., இதன் அடுத்த பாகத்திற்கும் இசையமைக்கவுள்ளார். இந்த தகவலை அவரே உறுதி செய்திருக்கிறார்.

    லோகேஷ் கனகராஜுடன் இசையமைப்பாளர் சாம். சி.எஸ்.


    இதையும் படிங்க - விக்ரம் – பா. ரஞ்சித் படத்தின் புதிய தகவல்…. கேரக்டர் குறித்த சூப்பர் அப்டேட்

    லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் நடிக்கவுள்ள 67 படத்திற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார். தளபதி 67 படத்தை தொடர்ந்து கைதி படத்தின் 2ம் பாகம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது இதில் மாற்றம் ஏதும் ஏற்பட்டால் கைதி 2 படம் முதலில் உருவாக்கப்படலாம்.

    சமீபத்தில் வெளியான சாணி காயிதம், சுழல் வெப் சீரிஸ், தற்போது வெளியாகியிருக்கும் ராக்கெட்ரி ஆகியவற்றிற்கு சாம் தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Karthi

    அடுத்த செய்தி