Home /News /entertainment /

ஆர்.ஆர்.ஆர். பட நாயகன் ராம் சரணை இயக்கும் லோகேஷ் கனகராஜ்...

ஆர்.ஆர்.ஆர். பட நாயகன் ராம் சரணை இயக்கும் லோகேஷ் கனகராஜ்...

ரா்ம சரண். லோகேஷ் கனகராஜ்

ரா்ம சரண். லோகேஷ் கனகராஜ்

Lokesh Kanagaraj Ram Charan : விஜய்யை அவர் மீண்டும் இயக்க உள்ள நிலையில், விக்ரம் படத்தின் பிரமாண்ட வெற்றியால் தளபதி 67 படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்திருக்கிறது.

    தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் ராம்சரண், படத்தை இயக்கப்போவதாக, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.

    விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, இந்தியா முழுவதும் அறியப்படும் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் மாறி இருக்கிறார். இவரது படத்தில் நடிப்பதற்கு மாஸ் நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    தற்போது வரையில், லோகேஷ் அடுத்ததாக விஜய் நடிக்கும் அவரது 67-வது படத்தை இயக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து, விக்ரம் படத்தின் அடுத்த பாகம் அல்லது கைதியின் 2-ம் பாகம் உருவாக்கப்பட உள்ளது.

    இதுவரை வெளியாகாத விக்கி - நயனின் புதிய புகைப்படங்களை வெளியிட்ட Netflix

    தற்போது விஜய் நடிக்கும் தளபதி 67 படத்திற்கான முதற்கட்ட பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டிருக்கிறார். இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தான் ராம்சரண் படத்தை இயக்கப்போவதாக லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார்.

    அவர் தனது பேட்டியில், ‘ராம்சரணுடன் நான் இணையும் படம், மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாக்கப்பட உள்ளது. நானும், ராம் சரணும் தற்போது 2/3 படங்களில் ஈடுபட்டிருக்கிறோம். எங்களுடைய படங்கள் முடிவடைந்த பின்னர் இருவரும் ஒரு பிரம்மாண்ட படத்தில் இணைவோம்’ என்று கூறியுள்ளார்.

    செஸ் ஒலிம்பியாட்: பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு சிவகார்த்திகேயன் நேரில் வாழ்த்து!

    மாநகரம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கைதி திரைப்படத்தின் வழியே மாஸ் இயக்குனராக அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இவ்விரு படங்களின் வெற்றியை தொடர்ந்து, உச்ச நட்சத்திரமான விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி, அதிலும் வெற்றி பெற்றார்.

    விஜய்யை அவர் மீண்டும் இயக்க உள்ள நிலையில், விக்ரம் படத்தின் பிரமாண்ட வெற்றியால் தளபதி 67 படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்திருக்கிறது. தளபதி 7 படத்தில் விஜய் கேங்ஸ்டராக நடிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Published by:Musthak
    First published:

    Tags: Lokesh Kanagaraj

    அடுத்த செய்தி