Home /News /entertainment /

விஜய்யின் தளபதி 67 படத்தில் த்ரிஷா? லோகேஷ் கனகராஜ் கொடுத்த க்ளூ...

விஜய்யின் தளபதி 67 படத்தில் த்ரிஷா? லோகேஷ் கனகராஜ் கொடுத்த க்ளூ...

விஜய் - த்ரிஷா

விஜய் - த்ரிஷா

'கில்லி', 'திருப்பாச்சி', 'ஆதி', 'குருவி' ஆகிய படங்களில் விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து நடித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    'தளபதி 67' படத்தில் த்ரிஷா நடிப்பது குறித்து சூசகமாக கூறியுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

    நடிகர் விஜய்யின் 67-வது படத்தை இயக்குவது உறுதி செய்த லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய்யுடன் மீண்டும் இணைவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளார். 'தளபதி 67' படம் பற்றி பல செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. இதில் நடிகை த்ரிஷா 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் மீண்டும் இணைவதாக கூறப்படுகிறது.

    தற்போது, லோகேஷ் கனகராஜ் 'தளபதி 67' படத்தில் த்ரிஷா நடிப்பது குறித்து சூசகமாக கூறியுள்ளார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் சமூக வலைதளங்களுக்கு தற்காலிக குட் பை சொல்லியிருந்தார். தனது அடுத்தப் படத்தின் கதையில் கவனம் செலுத்துவதற்காக சோஷியல் மீடியாவிலிருந்து அவர் பிரேக் எடுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் இன்னும் சமூக வலைதளங்களில் ஒரு கண் வைத்திருப்பது போல் தான் தெரிகிறது. சமீபத்தில் நடிகை த்ரிஷாவை ட்விட்டரில் பின்தொடரத் தொடங்கியுள்ளார் லோகேஷ்.

    'தளபதி 67' படத்தில் த்ரிஷா நடிப்பதை லோகேஷ் கனகராஜ் மறைமுகமாக உறுதிப்படுத்தியிருப்பதாக ரசிகர்கள் இதை எடுத்துக்கொள்கிறார்கள். அதோடு தங்களுக்குப் பிடித்த ஜோடி மீண்டும் இணைவதால் உற்சாகமாக இருக்கிறார்கள். 'கில்லி', 'திருப்பாச்சி', 'ஆதி', 'குருவி' ஆகிய படங்களில் விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து நடித்துள்ளனர். இந்த ஜோடி தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜோடிகளில் ஒன்றாக உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படப்பிடிப்பு தொடங்கியது!

    இதற்கிடையில், 'தளபதி 67' படத்தில் சமந்தாவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் சஞ்சய் தத், பிரித்விராஜ் சுகுமாரன் மற்றும் அர்ஜுன் சர்ஜா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க அணுகப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 'தளபதி 67' படம் குறித்து அக்டோபர் மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது நடிகர்கள் மற்றும் குழுவினரை தயாரிப்பாளர்கள் அறிவிப்பார்கள் என்று தெரிகிறது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Thalapathy Vijay, Actress Trisha, Lokesh Kanagaraj

    அடுத்த செய்தி