முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ரோலக்ஸ் கேரக்டரை முழு நீள படமாக்கும் லோகேஷ் கனகராஜ்

ரோலக்ஸ் கேரக்டரை முழு நீள படமாக்கும் லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் - சூர்யா

லோகேஷ் கனகராஜ் - சூர்யா

'தளபதி 67' ஒரு பான்-இந்தியன் ஆக்‌ஷன் படமாக உருவாகும் எனக் கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மையப்படுத்தி படம் இயக்கவிருப்பதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ். 

விஜய்யின் 67-வது படத்திற்காக லோகேஷ் கனகராஜ் மீண்டும் அவருடன் இணைந்ததால் தினமும் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளார். அவரை பொது இடங்களில் எங்கு பார்த்தாலும் தளபதி 67 சம்பந்தப்பட்ட கேள்விகளை முன் வைக்கிறார்கள். சமீபத்தில் ஒரு ஊடக உரையாடலில், தனது படங்களை வரிசைப்படுத்தினார் லோகேஷ். அதன்படி அவர் அடுத்ததாக 'தளபதி 67' படத்தைத் தொடர்ந்து 'கைதி 2', 'விக்ரம் 2' மற்றும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தின் முழு நீளப் படம் என பட்டியலிட்டார். இருப்பினும், அந்தந்த நடிகர்களின் நேரத்தைப் பொறுத்து இந்த வரிசை மாற்றப்படலாம்.

லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இயக்குனர்களில் ஒருவர். அவர் மீண்டும் விஜய்யுடன் இணையும் 'தளபதி 67' ஒரு பான்-இந்தியன் ஆக்‌ஷன் படமாக உருவாகும் எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்காக ப்ரோமோ வீடியோவை சமீபத்தில் படமாக்கினர் படக்குழு.

குழந்தையா இருந்த ’கோலி சோடா’ சாந்தினி இப்போ ஒரு குழந்தைக்கு அம்மா!

தளபதி 67 படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், நிவின் பாலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பதாகவும், த்ரிஷா 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்க்கு ஜோடியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கும் என்றும் 'வாரிசு' வெளியீட்டிற்குப் பிறகு இது குறித்த அப்டேட்டுகள் வெளியாகும் என்று தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Lokesh Kanagaraj, Thalapathy vijay