ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தளபதி 67 படப்பிடிப்பு தொடங்கியதை உறுதிப்படுத்திய லோகேஷ் கனகராஜ்!

தளபதி 67 படப்பிடிப்பு தொடங்கியதை உறுதிப்படுத்திய லோகேஷ் கனகராஜ்!

லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ்

நடிகர் மனோபாலா சில வாரங்களுக்கு முன்பு 'தளபதி 67' படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாக ட்விட்டரில் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

விஜய் நடித்த 'வாரிசு' படத்தை முதல் நாளில் பார்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்தார். நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை அவர் இயக்குவதை அனைவரும் அறிவோம். இதற்கு தற்காலிகமாக 'தளபதி 67' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், நேற்று நடந்த மற்றொரு நிகழ்வில் பேசிய லோகேஷ் கனகராஜ், தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த பத்து நாட்களுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்தார்.

நடிகர் மனோபாலா சில வாரங்களுக்கு முன்பு 'தளபதி 67' படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாக ட்விட்டரில் தெரிவித்தார். ஆனால் அதன் பிறகு அந்த பதிவை நீக்கினார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே துவங்கிவிட்டதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருப்பதால், இதன் முறைப்படியான அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். படத்தின் அறிவிப்புக்குப் பிறகு தளபதி 67 குறித்த வழக்கமான அப்டேட்டுகள் இருக்கும் என்றும் இயக்குனர் உறுதியளித்துள்ளார்.

வாரிசு படத்தில் குஷ்பு எங்கே? கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்

இதற்கிடையில், இந்த படம் லோகேஷ் கனகராஜின் LCU (லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்)-வின் ஒரு பகுதியாக இருக்கும் என்று செய்திகள் பரவி வருவதால், படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதாக தெரிகிறது. இயக்குனர் கௌதம் மேனன் தளபதி 67 படத்தில் இருப்பதை உறுதிப்படுத்திய நிலையில், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிருத்விராஜ் சுகுமாரன், த்ரிஷா, மன்சூர் அலி கான் மற்றும் அர்ஜுன் சர்ஜா ஆகியோரும் 'தளபதி 67' படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Lokesh Kanagaraj, Thalapathy vijay