கடந்த சில மாதங்களாக அதிகம் விவாதிக்கப்பட்ட வாரிசா துணிவா என்ற பிரச்னை ஓரளவுக்கு முடிவுக்கு வந்திருக்கிறது. நடிகர் விஜய் 'தளபதி 67' படத்திலும், நடிகர் அஜித் குமார் 'ஏகே 62' படத்திலும் கவனம் செலுத்தத் துவங்கியிருக்கிறார்கள்.
லோகேஷ் இயக்கும் 'தளபதி 67' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் துவங்கியது. இந்தப் படத்தில் விஜய்யுடன் திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப் படமும் லோகேஷின் எல்சியூ அடிப்படையில் உருவாவதாகக் கூறப்படும் நிலையில் 'கைதி' கார்த்தி , ரோலெக்ஸ் சூர்யா, 'விக்ரம்' கமல் உள்ளிட்ட கதாப்பாத்திரங்கள் இடம்பெறுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சமீபத்தில் கோயம்புத்தூரில் 'மைக்கேல்' பட விழாவில் பங்கேற்ற லோகேஷ் வருகிற பிப்ரவரி 1,2,3 ஆகிய தேதிகளில் தளபதி 67 பட அப்டேட் வெளியாகும் என்று அறிவித்திருந்தார்.
Code word Accepted 👀 @chiyaan #Thalapathy67 @actorvijay #ChiyaanVikram pic.twitter.com/eKnH6Up0TQ
— #Thalapathy67 (@TheVijay67FiIm) January 26, 2023
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் இயக்குநர் லோகேஷிடம் 'தளபதி 67' படத்தில் விக்ரம் நடிக்கிறாரா? எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த லோகேஷ், நானும் கேள்விப்பட்டேன். இந்த மாதிரி நிறைய கேள்விப்படறேன். கொஞ்ச நாள்ல அப்டேட் வந்துடும். நீங்களே தெரிஞ்சுக்குவீங்க. இப்போவை சொல்லிட்டா சர்ப்ரைஸ் இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Thalapathy Vijay, Actor Vikram, Lokesh Kanagaraj