ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தளபதி 67 படத்தில் விஜயுடன் இணைந்து நடிக்கும் பிக்பாஸ் பிரபலங்கள்?

தளபதி 67 படத்தில் விஜயுடன் இணைந்து நடிக்கும் பிக்பாஸ் பிரபலங்கள்?

லோகேஷ் கனகராஜ் - விஜய்

லோகேஷ் கனகராஜ் - விஜய்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படம் திட்டமிட்டப்படி டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

 • News18
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் விஜயுடன் பிக்பாஸ் பிரபலங்களான ராஜூ மற்றும் மைனா நந்தினி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

  நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது.  மேலும் வாரிசு திரைப்படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட உள்ளனர்.  இந்த திரைப்படத்தை தமிழகத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளரும், விஜய்-67 படத்தை தயாரிக்க உள்ளவருமான லலித்குமார் வெளியிடுகிறார். இதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது.

  இந்த நிலையில் வாரிசு படத்தை பிரபலப்படுத்தும் வேலைகளிலும் பட குழுவினர் இறங்கியுள்ளனர். அதில் முதல் கட்டமாக நடிகர் விஜயின் வாரிசு படத்தை புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.  அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  அதேசமயம் பாடல் வெளியீட்டு விழாவை நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகளும் இரண்டு வாரங்களுக்கு மேலாக நடைபெற்று வருகின்றன.

  இந்நிலையில் , லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படம் திட்டமிட்டப்படி டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடிகர் விஜய் சிறிய விடுமுறைக்காக துபாய் சென்றுள்ளார். அவர் சென்னை திரும்பியவுடன் வாரிசு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்வார்.

  அதன்பின் லோகேஷ் இயக்கத்தில், விஜய் தன்னுடைய 67வது படத்தில் நடிக்கவுள்ளார். அதற்கான முதல்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் படத்தின் நடிகர்களும் இறுதி செய்யப்பட்டு வருகின்றனர்.

  அதனடிப்படையில் இந்த படத்தில் த்ரிஷா, சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய மூன்று நாயகிகள் நடிக்க இருப்பதாகவும் அதேபோல் கவுதம் மேனன், பிரித்விராஜ் சுகுமாரன், மிஷ்கின் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

  Also read... உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா... ஹேப்பி பர்த்டே அதிதி ராவ்!

  முதல்கட்ட பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிவருவதால் விஜய் 67 படத்தை திட்டமிட்டப்படி டிசம்பர் முதல்வாரம் பூஜையுடன் தொடங்கவுள்ளது என படக்குழு தரப்பில் கூறுகின்றனர்.

  இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ராஜூ ஜெயமோகனும், அதேபோல் தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான மைனா நந்தினி இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Actor Vijay, Lokesh Kanagaraj