• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விக்ரம் படம் குறித்து லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட புதிய தகவல்!

விக்ரம் படம் குறித்து லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட புதிய தகவல்!

விக்ரம்

விக்ரம்

விக்ரமின் இரண்டாவது ஷெட்யூல் காரைக்குடியில் நடபெறுகிறது.

  • Share this:
    விக்ரம் படத்தின் காரைக்குடி ஷெட்யூல்ட் குறித்து முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

    கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் சென்ற மாதம் தொடங்கியது. கமல், விஜய் சேதுபதி படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். தெலுங்கு புஷ்பா படத்தை முடித்த பின் பகத் பாசில் விக்ரம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    விக்ரமின் இரண்டாவது ஷெட்யூல் காரைக்குடியில் நடபெறுகிறது. இதில் கமல், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படும் என தெரிகிறது. ஆகஸ்ட் 27 முதல் விஜய் சேதுபதி காரைக்குடி ஷெட்யூல்டில் கலந்து கொள்வார் என படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். தற்போது விஜய் சேதுபதி காத்துவாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பில் உள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமந்தா, நயன்தாரா நடிக்கும் படம் இது.

    விக்ரம் படத்துக்கு க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். அன்பறிவ் சண்டைப் பயிற்சி. 2022 கோடையில் படம் திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: