ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'இதுக்காகத் தானே காத்திருந்தேன்' - 'வாரிசு' படம் பார்த்த லோகேஷ் - தளபதி 67 குறித்து அப்டேட்

'இதுக்காகத் தானே காத்திருந்தேன்' - 'வாரிசு' படம் பார்த்த லோகேஷ் - தளபதி 67 குறித்து அப்டேட்

லோகேஷ் கனகராஜ் - விஜய்

லோகேஷ் கனகராஜ் - விஜய்

சென்னையில் தற்போது முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக காஷ்மீர் செல்லவிருக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

வாரிசு படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பிரபலங்களுக்காக இந்தப் படத்தின் சிறப்பு திரையிடல் நேற்றிரவு நடைபெற்றது. படம் பார்த்த பலரும் நடிகர் விஜய்யின் நடிப்பை சிலாகித்து பேசினர். அந்த வகையில் இன்று திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுவருகிறது. இந்தப் படத்தின் காட்சிகள் முன் கூட்டியே கணிக்கக் கூடியதாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

வாரிசு படத்தையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்க, அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். சென்னையில் தற்போது முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக காஷ்மீர் செல்லவிருக்கின்றனர்.

லோகேஷிடம் எப்பொழுது தளபதி 67 பட அப்டேட் கேட்டாலும் முதலில் வாரிசு ரிலீஸாகட்டும், பிறகு சொல்கிறேன் என்பார். இந்த நிலையில் குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் வாரிசு படம் பார்த்த லோகேஷிடம் செய்தியாளர்கள் தளபதி 67 அப்டேட் கேட்டனர். அப்போது பேசிய அவர், வாரிசு படத்தின் வெளியீட்டுக்காகத் தான் காத்திருந்தேன். இனி தளபதி 67 படத்தின் அப்டேட்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார். இதே குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் தான் விக்ரம் படத்தின் முக்கிய காட்சியை இயக்குநர் லோகேஷ் படமாக்கியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலியும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்தத் தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. பேன் இந்தியா படமாக உருவாகவுள்ள இந்தப் படத்தில் மேலும் பல்வேறு இந்திய பிரபலங்கள் இணையவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Lokesh Kanagaraj, Varisu