திரையரங்குகள் திறப்பு எப்போது? - அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்

திரையரங்குகள் திறக்க அனுமதிப்பது குறித்து சரியான நேரத்தில் தமிழக முதல்வர் முடிவெடுப்பார் என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறியுள்ளார்.

திரையரங்குகள் திறப்பு எப்போது? - அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்
அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ
  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதரம் பாதிக்கப்பட்ட பூ கட்டும் தொழிலாளர்கள் மற்றும் சைக்கிள் பழுதுபார்க்கும் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு 425 குடும்பத்தினருக்கு தேவையான அரிசி, மளிகைபொருள்கள் உள்ளிட்ட உணவு பொருள்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி மார்க்கெட் சாலையில் நடைபெற்று வரும் பால பணிகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ, “வழிபாட்டு தலங்கள், திரையங்குகள் திறப்பது குறித்து வரும் 8-ம் தேதிக்கு மேல் மாநில அரசுகள் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுத்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே தமிழக முதல்வர் நாளைய தினம் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்வார்.


புகைப்பிடித்தல், புகையிலை போன்ற விளம்பரங்கள் வெளியிடப்பட்டாலும், அது போன்ற காட்சி வந்தாலும் அதன் தீமைகள் குறித்து குறிப்பிட்டு தான் வெளியிட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. தீமை பற்றி குறிப்பிடமால் விளம்பரம் வெளியிடும் நிலை தமிழகத்தில் இல்லை.

சின்னத்திரை படபிடிப்பு நடத்துவதற்கு அனுமதி பெறுவதற்கான  வழிமுறைகளை எளிமைப்படுத்தி தமிழக அரசு உத்தரவு வழங்கியது. ஒரு தொடருக்கு ஒரு முறை அனுமதி வாங்கினால் போதும் என்ற அறிவிப்பையும் இரண்டாவதாக வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார். முதலில் வெளியிட்ட அறிவிப்பில் தினமும் படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை மறு பரீசிலனை செய்ய வேண்டும் என்று சின்னத்திரையினர் என்னிடம் தெரிவித்தனர். உடனடியாக முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்றேன். முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவாக ஒரு தொடருக்கு படப்பிடிப்பு நடத்த ஒரு முறை அனுமதி வாங்கினால் போதும் என்று தெரிவித்துள்ளார். இதனை சின்னத்திரையினரும் ஏற்றுக்கொண்டு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.திரையரங்குள், வழிபாட்டு தலங்கள், நீச்சல்குளம், மால் போன்ற இடங்களை திறப்பது குறித்து பற்றி மத்தியரசு ஒரு நிலைப்பாட்டினை அறிவிக்க வேண்டும். மத்திய சுகதார குழுவும் அறிவுறுத்த வேண்டும். தளர்வு அளிக்கப்பட வேண்டும், அனைவரும் நன்றாக இயங்க வேண்டும், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் அரசு, அதே நேரத்தில் சமூக பரவல் ஏற்பட்டு விடக்கூடாது. அதனை தடுக்க வேண்டும் என்பதில் அதை விட கவனமாக இருக்க வேண்டிய நிலையில் உள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு முதல்வர், அனைத்து நிலைகளிலும் அனைத்து சரியான முடிவை சரியான நேரத்தில் எடுத்தார்களோ, திரையரங்குகள் திறப்பது குறித்தும் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பார்” என்றார்.

மேலும் படிக்க: நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் அட்லீயின் அடுத்த படம்
First published: May 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading