Vaathi Coming: ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு விஜய் போலவே நடனமாடிய சிறுவன் - வைரல் வீடியோ

Vaathi Coming: ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு விஜய் போலவே நடனமாடிய சிறுவன் - வைரல் வீடியோ

வாத்தி கம்மிங் பாடல்

மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற ’வாத்தி கம்மிங்’ பாடல் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.

  • Share this:
    ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு சிறுவன் ஒருவன் நடனமாடிய வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது. இதில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்த இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

    Vaathi Coming: 70 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘வாத்தி கம்மிங் பாடல்’!

    கொரோனா பரவலுக்கு பிறகு திரையரங்கில் வெளியான முதல் பெரிய படம் என்பதால் மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. திரையரங்கில் வெளியாகிய 16 நாட்களில் ஓடிடி-யிலும் வெளியிடப்பட்டாலும், தியேட்டர்களில் கூட்டம் குறையாமல் இருந்தது. உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்ற மாஸ்டர் வசூலிலும் முன்னணி இடத்தைப் பெற்றது.



    குறிப்பாக மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற ’வாத்தி கம்மிங்’ பாடல் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இந்தப் பாடலுக்கு பிரபலங்கள், சிறியோர், பெரியோர் என அனைவரும் நடனமாடி, அந்த வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு வந்தனர்.

    இந்நிலையில் படம் வெளியான பிறகு வாத்தி கம்மிங் பாடலின் வீடியோ யூ-ட்யூபில் வெளியானது. இதையடுத்து அந்தப் பாடலில் விஜய் நடனமாடியது போலவே சிறுவன் ஒருவன் நடனமாடும் வீடியோ தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது. தவிர வாத்தி கம்மிங் பாடல் தற்போது 70 மில்லியன் பார்வைகளை தாண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: