Home /News /entertainment /

லிங்குசாமியின் வாரியர் திரைப்படம் தமிழில் வெளியாவதில் நீடிக்கும் சிக்கல்

லிங்குசாமியின் வாரியர் திரைப்படம் தமிழில் வெளியாவதில் நீடிக்கும் சிக்கல்

வாரியர் திரைப்படம் தமிழில் வெளியாவதில் நீடிக்கும் சிக்கல்

வாரியர் திரைப்படம் தமிழில் வெளியாவதில் நீடிக்கும் சிக்கல்

The Warrior | லிங்குசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரியர் திரைப்படத்தின் தமிழ் பதிப்பு வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது. 

தமிழ் இயக்குநர் லிங்குசாமி தற்போது தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் தி வாரியர் என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார். தமிழ் -  தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் அந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தை நாளை வெளியிடுகின்றனர்.

இதற்கான திரையரங்கு ஒப்பந்தம் உள்ளிட்ட அனைத்து வேலைகளும் முடிவடைந்து விட்டன.  ஆனால் வாரியர் படத்தின் தமிழ் பதிப்பை தமிழகத்தில் வெளியிட சிக்கல் நீடித்து வருகிறது.  இயக்குநர் லிங்குசாமியின் முந்தைய திரைப்படங்களில் ஏற்பட்ட கடன் காரணமாக இந்த சிக்கல் நீடித்து வருகிறது.

Also Read : கை விரித்த பிரபல ஓடிடி தளம்... ஏமாற்றத்தில் நயன்தாரா விக்னேஷ் சிவன்

லிங்குசாமி தற்போதைய நிலையில் 5 கோடி ரூபாய் கொடுத்தால் மட்டுமே படத்திற்கான என்.ஓ.சி கிடைக்கும் என திரைத்துறையில் கூறுகின்றனர். இந்தப் படம் நாளை வெளியாக வேண்டிய சூழல் இருப்பதால் சென்னையில் இதற்கான பேச்சுவார்த்தை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.  அதில் லிங்குசாமி,  பிரபல பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுடன் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே வாரியர் திரைப்படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகும்.  ஒருவேளை பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் வாரியர் படத்தின் தமிழ் பதிப்பு வெளியாவது சந்தேகம் என தெரிவிக்கின்றனர்.  இருந்தாலும் படத்தை திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் திரைத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
Published by:Vijay R
First published:

Tags: Director lingusamy, Entertainment

அடுத்த செய்தி