முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மோதிக்கொள்ளும் பார்த்திபன் - லிங்குசாமி படங்கள்

8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மோதிக்கொள்ளும் பார்த்திபன் - லிங்குசாமி படங்கள்

பார்த்திபன் - லிங்குசாமி

பார்த்திபன் - லிங்குசாமி

இந்த இரண்டு படங்களும் அடுத்த அடுத்த நாட்களில் வெளியாகின்றன. மேலும் இரண்டு படங்களும் வெற்றியடையும் என சினிமா துறையினர் கூறுகின்றனர்.

  • 1-MIN READ
  • Last Updated :

அஞ்சான் - கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஆகிய படங்களுக்கு பின் தமிழ் சினிமாவில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் லிங்குசாமி - பார்த்திபன் ஆகியோர் மோதிக்கொள்கின்றனர்.

தமிழில் கடந்த 2014 ஆண்டி ஆகஸ்ட் 15-ம் தேதி லிங்குசாமி இயக்கிய அஞ்சான் மற்றும் பார்த்திபன் இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் படங்கள் வெளியாகின.

அதில் அஞ்சான் படத்தில் சூர்யா, சமந்தா, சூரி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அதேபோல் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இங்குசாமி கற்றுக்கொண்ட மொத்த வித்தையும் இந்தப் படத்தில் இறக்கியுள்ளேன் என்று கூறினார். அதனால் அஞ்சான் படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தார்.

சூர்யா ஹீரோ, லிங்குசாமி இயக்கம் என்ற பெரிய படத்துடன் பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் களமிறங்கியது. அதில் சந்தோஷ் நாயகனாக நடித்திருந்தார். பார்த்திபன் தயாரித்து இயக்கி சிறப்பு தோற்றத்தில் வந்தார். இருந்தாலும் அது சிறிய படமாகவே பார்க்கப்பட்டது. அதனால் திரையரங்குகளும் குறைவாகவே ஒதுக்கப்பட்டன.

சுதந்திர தினத்திற்கு வெளியான இந்த இரண்டு படங்களில் அஞ்சான் படத்திற்கு முதல் நாளில் அமோக வரவேற்பு கிடைத்தது. ஆனால் படம் பார்த்த ரசிகர்களை அந்தப் படம் கவரவில்லை. மேலும் இயக்குநர் லிங்குசாமியை ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். அது லிங்குசாமியை கடுமையாக பாதித்தது.

ஒரு புறம் அஞ்சான் படம் எதிர்மறையான விமர்சனத்தை சந்தித்த நிலையில் இன்னொரு புறம் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் நல்ல பாராட்டுகளை பெற்றது. அத்துடன் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டன. மேலும் அந்தப் படம் பார்த்திபனுக்கு லாபகரமாக அமைந்தது. அத்துடன் 20 வருடங்களுக்கு பிறகு வெற்றியடைந்த பார்த்திபன் படம் எனவும் பாராட்டினர்.

இதன் பின் பார்த்திபன் மற்றும் லிங்குசாமி இயக்கிய படங்கள் வேறு வேறு வருடங்களில் வெளியாகின. இந்த நிலையில் தற்போது 8 ஆண்டுகள் கழித்து லிங்குசாமி மற்றும் பார்த்திபன் ஆகியோரின் படங்கள் ஒரே சமயத்தில் வெளியாகின்றன. அதில் ராம் பொத்தினேனி நடிப்பில் தெலுங்கு - தமிழ் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள தி வாரியர் படம் வரும் 14-ம் தேதியும், பார்த்திபன் இயக்கி நடித்துள்ள இரவின் நிழல் 15-ம் தேதியும் வெளியாகின்றன.

இதில் வாரியர் திரைப்படம் ஆக்‌ஷன், காதல், செண்டிமெண்ட் என பக்கவான கமர்ஷியல் பார்முலாவில் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான புல்லட் மற்றும் விசில் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

Also read... உறியடி விஜயகுமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

இதேபோல் 96 நிமிடங்கள் ஓடக்கூடிய இரவின் நிழல் திரைப்படம் முழுவதும் Single Short முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் கேன்ஸ் போன்ற திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இது பல கலைஞர்களின் கடும் உழைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு படங்களும் அடுத்த அடுத்த நாட்களில் வெளியாகின்றன. மேலும் இரண்டு படங்களும் வெற்றியடையும் என சினிமா துறையினர் கூறுகின்றனர். இருந்தாலும் ரசிகர்கள் எந்தப் படத்திற்கு ஆதரவு கொடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Parthiban, Director lingusamy