Home /News /entertainment /

லிங்குசாமி இயக்கும் ‘தி வாரியர்’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..

லிங்குசாமி இயக்கும் ‘தி வாரியர்’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..

தி வாரியர் படத்தில் ராம் பொதினேனி

தி வாரியர் படத்தில் ராம் பொதினேனி

The Warrior Movie : தி வாரியர் திரைப்படம் ராம் பொதினேனிக்கு 19-வது திரைப்படமாகும். படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஐதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் படமாக்கப்பட்டன.

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான லிங்குசாமியின் தி வாரியர் படத்துடைய ட்ரெய்லர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழில்  பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர் லிங்குசாமி தெலுங்கு இளம் ஹீரோவான ராம் பொதினேனியை வைத்து தி வாரியர் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

    தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தி வாரியர் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் போலிஸ் கேரக்டரில் ராம் பொதினேனி நடித்துள்ளார்.  அதிரடி ஆக்சன் மாஸ் என்டர்டெய்னர் படமாக தி  வாரியர் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த படத்தில் ராமுக்கு ஜோடியாக வளர்ந்து வரும் நாயகி கிரீத்தி ஷெட்டி நடிக்கிறார்.  இந்நிலையில் படத்தின் தியேட்டர் டிரெய்லர் ஜூலை 1 ஆம் தேதி இரவு 7:57 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



    ராம் பொதினேனி தனது சினிமா கேரியரில் முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். சமீபத்தில் வெளியான டீசர் மற்றும் பாடல்கள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளன.

    விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் படத்தை பாராட்டிய மிஷ்கின்!

    இந்த படத்தில் ஆதி பினிசெட்டி, அக்ஷரா கவுடா மற்றும் நதியா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஜூலை 14ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

    துல்கர் சல்மான் நடிப்பில் உருவான 'சீதா ராமம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

    தி வாரியர் திரைப்படம் ராம் பொதினேனிக்கு 19-வது திரைப்படமாகும். படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஐதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் படமாக்கப்பட்டன.
    Published by:Musthak
    First published:

    Tags: Director lingusamy

    அடுத்த செய்தி