ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சமந்தா ரூட்டை கையில் எடுக்கும் அஞ்சலி… சிறப்பு பாடலுக்கு ஆட்டம்

சமந்தா ரூட்டை கையில் எடுக்கும் அஞ்சலி… சிறப்பு பாடலுக்கு ஆட்டம்

சமந்தா - அஞ்சலி

சமந்தா - அஞ்சலி

Actress Anjali Single song : அஞ்சலியின் காஸ்ட்யூம் புஷ்பா படத்தில் சமந்தா அணிந்ததைப் போன்று உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தெலுங்கில் உருவாகியுள்ள படம் ஒன்றில், சிறப்பு பாடல் ஒன்றுக்கு ஆட்டம் போட்டுள்ளார் நடிகை அஞ்சலி. புஷ்பா படத்தில் சமந்தாவுக்கு அமைந்த ஊ சொல்றியா மாமா பாடல் போன்று இந்தப் பாடல் அமையுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

கடந்த ஆண்டு வெளியான புஷ்பா படத்திற்கு அந்த படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா பாடல் மிகப்பெரும் விளம்பரத்தை தேடித் தந்தது. பாடல் வரிகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதற்கு படக்குழுவினர் விளக்கம் அளித்தனர்.

ஒற்றைப் பாடலுக்கு ஆட்டம் போட்டாலும், படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மந்தனா அளவுக்கு சமந்தா பேசப்பட்டார். இதேபோன்ற பாடல் அடுத்து உருவாகி வரும் புஷ்பா 2 படத்தில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க - கோமாளி பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்திற்கு லவ் டுடே என தலைப்பு!

இந்நிலையில் சமந்தாவின் ஒற்றைப் பாடல் ரூட்டை நடிகை அஞ்சலி கையில் எடுத்துள்ளார். சமீபகாலமாக சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் அவருக்கு அமையாத நிலையில் ‘மச்செர்லா நியோஜகவர்கம்’ என்ற படத்தில் சிறப்பு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் அஞ்சலி.

இதுதொடர்பான புகைப்படம் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதில், அஞ்சலியின் காஸ்ட்யூம் புஷ்பா படத்தில் சமந்தா அணிந்ததைப் போன்று உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க - நடிகை ஐஷ்வர்யா மேனனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்…

நிதின் நடிக்கும் மச்செர்லா படத்தை ராஜசேகர ரெட்டி இயக்கியுள்ளார். சுதாகர் ரெட்டி, நிகிதா ரெட்டி ஆகியோர் இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். கேத்ரின் தெரசா, கிரித்தி ஷெட்டி ஆகியோர் படத்தில் இடம்பெற்றுள்ளார்கள்.

First published:

Tags: Actress Anjali, Actress Samantha