• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் தமிழ் படம் நண்பகல் நேரத்து மயக்கம்

லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் தமிழ் படம் நண்பகல் நேரத்து மயக்கம்

லிஜோ ஜோஸ் பெல்லிசேரி

லிஜோ ஜோஸ் பெல்லிசேரி

மம்முட்டி நாயகனாக நடிக்கும் இந்தப் படத்துக்கு நண்பகல் நேரத்து மயக்கம் என தமிழில் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மம்முட்டியின் மம்முட்டி கம்பெனி நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

  • Share this:
    மலையாளத்தின் முன்னணி இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மலையாளம், தமிழில் ஒரு படம் தயாராகிறது. இது இவரது முதல் தமிழ் படமாகும்.

    மலையாள சினிமாவின் சமகால இயக்குனர்களில் முக்கியமானவர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. இவரது ஆமென், அங்கமாலி டைரிஸ், இ.ம.யோ, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட படங்கள் உலக அளவில் வரவேற்பை பெற்றன. ஜல்லிக்கட்டு இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது சுழலி என்ற படத்தை, அவர் செம்பன் வினோத்தை வைத்து இயக்கியுள்ளார். டிசம்பர் மாதம் சோனிலிவ் ஓடிடியில் அது வெளியாகிறது.

    இதையடுத்து மலையாளம், தமிழில் அவர் ஒரு படத்தை இயக்குகிறார். மம்முட்டி நாயகனாக நடிக்கும் இந்தப் படத்துக்கு நண்பகல் நேரத்து மயக்கம் என தமிழில் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மம்முட்டியின் மம்முட்டி கம்பெனி நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இதன் திரைக்கதையை எஸ்.ஹரிஷ் எழுதியுள்ளார். பழனியை மையப்படுத்தி இந்தப் படம் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. 40 தினங்கள் ஒரே ஷெட்யூல்டில் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

    Lijo Jose Pellissery Tamil film titled as Nanpagal nerathu mayakkam, lijo jose pellissery salary, lijo jose pellissery new movie, lijo jose pellissery movies ranked, lijo jose pellissery father, lijo jose pellissery age, lijo jose pellissery movies imdb, lijo jose pellissery wife, lijo jose pellissery brother, Lijo Jose Pellissery tamil film, Lijo Jose Pellissery mammootty, Lijo Jose Pellissery mammootty movie, லிஜோ ஜோஸ் பெல்லிசேரி, லிஜோ ஜோஸ் பெல்லிசேரி தமிழ் படம்

    நண்பகல் நேரத்து மயக்கம் படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் ஆமென் படத்தில் அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்த பகத் பாசில் நாயகனாக நடித்தார். அங்கமாலி டைரிஸில் நடித்த அனைவரும் புதுமுகங்கள். இ.ம.யோ. படத்தில் செம்பன் வினோத் மற்றும் விநாயகன், சுழலியில் செம்பன் வினோத். தனது படங்களில் மாஸ் நடிகர்களை பயன்படுத்தாத லிஜோ ஜோஸ் பெல்லிசேரி, இந்த புதிய படத்தில் மம்முட்டியை இயக்குகிறார்.

    Lijo Jose Pellissery Tamil film titled as Nanpagal nerathu mayakkam, lijo jose pellissery salary, lijo jose pellissery new movie, lijo jose pellissery movies ranked, lijo jose pellissery father, lijo jose pellissery age, lijo jose pellissery movies imdb, lijo jose pellissery wife, lijo jose pellissery brother, Lijo Jose Pellissery tamil film, Lijo Jose Pellissery mammootty, Lijo Jose Pellissery mammootty movie, லிஜோ ஜோஸ் பெல்லிசேரி, லிஜோ ஜோஸ் பெல்லிசேரி தமிழ் படம்

    படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்க இதைவிட காரணம் வேண்டுமா?



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: