Home /News /entertainment /

நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகர்… காரணம் இதுதானாம்

நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகர்… காரணம் இதுதானாம்

லைகர் படத்தின் போஸ்டர்

லைகர் படத்தின் போஸ்டர்

Liger Vijay Devarakonda : விஜய் தேவர கொண்டா தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    தனது நிர்வாண  புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகரின் பதிவு ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

    தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றதுடன் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

    தற்போது விஜய் தேவரகொண்டா ‘லைகர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தர்மா புரொடக்சன்ஸ் மற்றும் பூரி கனெக்ட்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படத்தை பூரி ஜெகன்னாத் இயக்கிவருகிறார்.

    லைகர் படத்தில் குத்துச் சண்டை வீரர் என்ற கேரக்டரில் விஜய் தேவரகொண்ட நடிக்கிறார். மேலும், சர்வதேச புகழ்பெற்ற குத்துச் சண்டை வீரரான மைக் டைசனும் இந்த படத்தில் இடம்பெற்றிருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க - அரசியலில் நுழையும் எந்த எண்ணமும் இல்லை - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால்

    இந்த நிலையில் கையில் பூங்கொத்து ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு நிர்வாண புகைப்படம் ஒன்றை விஜய் தேவரகொண்டா வெளியிட்டுள்ளார்.

    இதுதொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், ‘என்னிடம் உள்ள எல்லாவற்றையும் லைகர் படம் எடுத்துக் கொண்டது. நடிப்பு,மனம் மற்றும் உடலளவில் மிகப்பெரும் சவாலை இந்த படம் ஏற்படுத்தியது’ என்று கூறியுள்ளார்.


    தேவரகொண்டாவின் இந்த பதிவுக்கு கலவையான கமென்டுகளை நெட்டிசன்கள் அளித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க - இந்த வீக்எண்டை இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்களோட செலிபரேட் பண்ணுங்க!

    ஒரு தரப்பினர் பாராட்டினாலும், படத்தின் புரொமோஷனுக்காக இப்படியா செய்வது என்று கிண்டல் தொனியில் கமென்ட் செய்துள்ளனர். முன்பு இந்தியில் மெகா ஹிட்டான பி.கே.படத்திற்காக ஆமிர் கான் நிர்வாணமாக போட்டோ வெளியிட்டிருந்தார்.

    விஜய் தேவர கொண்டா தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Vijay devarakonda

    அடுத்த செய்தி